மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்ததுஇந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ரூ.5,555 விலையில் 5000mAh பேட்டரி திறன் பெற்ற மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

The Power Of 5 என்ற கோஷத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாரத் 5 மொபைல் முந்தைய பாரத் 1, பாரத் 2, பாரத் 3, மற்றும் பாரத் 4 ஆகிய மொபைல்போன்களின் வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.

வருகின்ற மாரச் மாத முடிவுக்குள் 6 மில்லியன் கருவிகளை விற்பனை செய்யும் நோக்கில் ஆஃப்லைன் சந்தையில் பாரத் 5 கிடைக்க தொடங்கியுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முந்தைய டிசைனை போலவே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் பின்புறத்தில் அமைந்துள்ள எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய கேமரா இரட்டை கேமரா கொண்ட மொபைல் போன்ற காட்சியை வெளிப்படுத்துகின்றது.

5.2 அங்குல காட்சி திரையானது ஐபிஎஸ் கொண்டதாக 2.5D கிளாஸ் பாதுகாப்புடன் 720 பிக்சல் தீர்மானத்தை பெற்றதாக வந்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்ததுபிராசெஸர் & ரேம்

குவாட் கோர் மீடியாடெக் பிராசெஸர் கொண்டு இயக்கப்படுகின்ற பாரத் 5 மொபைலில் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன், கூடுதலான சேமிப்பை விரிவுப்படுத்த மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா துறை

பாரத் 5 மொபைல் போனில் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய முன் மற்றும் பின்புற கேமரா சென்சார்கள் என இரண்டும் 5 மெகாபிக்சல்கள் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை பின்பற்றி வந்துள்ள மைக்ரோமேக்ஸ் பாரத் 5 மொபைல் போன் இரண்டு நாட்கள் முழுமையான பயன்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலின் ஸ்டேன்ட் பை டைம் மூன்று வாரங்களாகும்.

மற்றவை

இந்த மொபைல் போனில் துனை விருப்பங்களாக 4G LTE, VoLTE, Wi-Fi 802.11 b/g/n, புளூடூத், ஜிபிஎஸ், மற்றும் மைக்ரோ யூஎஸ்பி ஆகியவற்றை பெற்றுள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

விலை

அனைத்து மொபைல் ரீடெயலர்களிடமும் கிடைக்க உள்ள மைக்ரோமேக்ஸ் பாரத் 5 மொபைல் போன் விலை ரூ.5,555 ஆகும்.

டேட்டா சலுகை

மைக்ரோமேக்ஸ் மற்றும் வோடபோன் இணைந்து 50ஜிபி இலவச கூடுதல் டேட்டாவை முதல் 5 மாதங்களுக்கு தலா 10 ஜிபி டேட்டா என வழங்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here