மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ அறிமுகம்ரூ.13,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிடிட்டி ப்ரோ ஸ்மார்ட்போன் மிக சிறப்பான வசதிகளை கொண்ட குறைந்த விலை மாடலாக விளங்குகின்றது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ அறிமுகம்

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மாடலில் இடம்பெற்றுள்ள இன்ஃபினிட்டி டிஸ்பிளே தரத்தினை ரூ.9,999 விலையில் கேன்வாஸ் இன்ஃபினிட்டி என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியிட்டிருந்தது.

தற்போது இதன் அடிப்படையிலான மேம்பட்ட மாடல் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ விபரங்களை பின்வருமாறு;-

டிசைன் & டிஸ்பிளே

எட்ஜ் டூ எட்ஜ் திரையை பெற்றுள்ள இந்த மொபைல் போன் 5.7 அங்குல முழு உயர் தெளிவு திரையுடன் 2.5D கிளாஸ் பாதுகாப்புடன், இரட்டை முன்புற கேமரா வசதி கொண்டதாக கிடைக்கின்றது.

பிராசெஸர் & ரேம்

அக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430SoC சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன், கூடுதலான நினைவு திறனை நீட்டிக்க 128ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா துறை

முன்புறத்தில் மிக சிறப்பான வகையில் செல்ஃபீ மற்றும் வீடியோஅழைப்புகளை எதிர்கொள்ளும் நோக்கில் 20 MP + 8MP சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.

பின்புறத்தில் 1080 பிக்சல் தீர்மானத்தை கொண்ட வீடியோவை பதிவு செய்யும் நோக்கில் 16 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்னணியாக கொண்டு செயல்படுகின்ற மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ மொபைலில் 420 மணிநேர ஸ்டேன் பை டைம் கொண்ட 3,000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது.

மற்றவை

கைரேகை சென்சார், 4G VoLTE, இரட்டை சிம், Wi-Fi 802.11 b/g/n, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், மற்றும் USB OTG ஆகியவற்றை துனை விருப்பங்களாக பெற்று விளங்குகின்றது.

விலை

வருகின்ற டிசம்பர் 6ந் தேதி முதல் ஃபிளிப் கார்ட் இணையதளத்தில் ரூ.13,999 விலையில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ மொபைல் விற்பனைக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here