செல்ஃபீ படங்களை மிக சிறப்பாக பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மைக்ரோமேக்ஸ் செல்ஃபீ 2 ஸ்மார்ட்போன் ரூ.9,999 விலையில் ஆஃப்லைன் சந்தையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்க உள்ளது.

ரூ.9,999 விலையில் மைக்ரோமேக்ஸ் செல்ஃபீ 2 மொபைல் விற்பனைக்கு வந்தது

மைக்ரோமேக்ஸ் செல்ஃபீ 2

நமது நாட்டின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்ஃபீ 2 ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 1ந் தேதி முதல் ஆஃப்லைன் ரீடெயிலர்கள் வாயிலாகவும், 100 நாட்கள் ரீபிளைஷ்மென்ட் வாரண்டி மற்றும் ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகின்றது.

ரூ.9,999 விலையில் மைக்ரோமேக்ஸ் செல்ஃபீ 2 மொபைல் விற்பனைக்கு வந்தது

டிசைன் & டிஸ்பிளே

மிகவும் ஸ்டைலிஷான செல்ஃபீ படங்களுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள செல்ஃபீ 2 மொபைலில் மெட்டல் பாடியுடன் கூடிய 5.2 அங்குல திரையுடன் கூடிய 720×1280 பிக்சல் தீர்மானத்துடன் 2.5 டி வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் கூடிய அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது.

ரூ.9,999 விலையில் மைக்ரோமேக்ஸ் செல்ஃபீ 2 மொபைல் விற்பனைக்கு வந்தது

பிராசஸர் & ரேம்

பெர்ஃபாமென்ஸ் ரக பிரிவில் 1.35GHz மீடியாடெக் MT6737 SoC பிராசஸருடன் 3ஜிபி ரேம் பெற்று 32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் கூடிய  64ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்துக் கொள்ளலாம்.

கேமரா

முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை பதிவு செய்யும் வகையில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு சோனி IM135 சென்சார் சாஃப்ட் பிளாஷ் உடன் பொக்கே அம்சம் போன்றவை பெற்றுள்ளது.

பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டு ஆட்டோஃபோகஸ் உள்பட f/2.0 போன்றவற்றுடன் எல்இடி ஃபிளாஷ் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

ரூ.9,999 விலையில் மைக்ரோமேக்ஸ் செல்ஃபீ 2 மொபைல் விற்பனைக்கு வந்தது

பேட்டரி

250 மணி நேரம் ஸ்டேன்ட் பை டைம் மற்றும் 11 மணி நேரம் டாக் டைம் பெற்ற மைக்ரோமேக்ஸ் செல்ஃபீ 2 மொபைலில் 3000mAh பேட்டரி திறன் கொண்டு இயக்கப்படுகின்றது.

மற்றவை

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற செல்ஃபீ 2 மொபைலில் 4ஜி வோல்ட்இ, வை-ஃபை, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

விலை

ஆகஸ்ட் 1ந் தேதி முதல் ஆஃப்லைன் சந்தையில் விற்பனைக்கு கிடைக்க உள்ள மைக்ரோரேக்ஸ் செல்ஃபீ 2 விலை ரூ.9,999 மட்டுமே.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here