Microsoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு மாற்றாக களமிறங்கிய மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மொபைல் இயங்குதளத்திற்கான ஆதரவை டிசம்பர் 2019-ல் நிறுத்திக் கொள்ள உள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வின்டோஸ் 10 மொபைல் இயங்குதளத்துக்கான ஆதரவை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் காராணமாக பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை வழங்குவது நிறுத்தப்படும். இதன் காரணமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படுகின்ற சில செயலிகள் தனது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ள உள்ளன.

ஆரம்பகட்டத்தில் அமோக ஆதரவை பெற்ற விண்டோஸ் இயங்குதளம், தொடர் வரவேற்பை பெறாமல் ஆண்ட்ராய்டு ஆதக்கத்தால், தனது சந்தையை முழுதாக இழந்தது. இதன் காரணமாக மொபைல் சந்தையிலிருந்து விண்டோஸ் வெளியேற தொடங்கியது.

மேலும், விண்டோஸ் இயங்குதள மொபைல்கள் தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் விரிவான முக்கிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ‘மேம்பாடு ஆதரவு நிறுத்தப்படுவதன் காரணமாக ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஸ் இயங்குதளத்தைக் கொண்ட சாதனத்திற்கு மாறிக்கொள்ளுங்கள்’ எனவும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மொபைல் பயனாளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.

விண்டோஸ் 10 மொபைல் வெர்ஷன் 1709, இந்தாண்டு டிசம்பர் 10 வரை ஆதரவை செய்யும் எனவும், விண்டோஸ் 10 மொபைல் வெர்ஷன் 1703 கொண்ட லூமியா 640 XL வரும் ஜூன் 11 வரை மட்டும் சப்போர்ட் செய்யும் என தெரிவிகப்பட்டுள்ளது. இதன் காரணமாக விண்டோஸ் மொபைலை பயன்படுத்தும் பயனாளர்கள் மாற்று இயங்குதள சாதனங்களுக்கு மாறுவது மிக அவசியமாகின்றது.