இந்தியாவில் 3 புதிய போர்ட்டபிள் வயர்லஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது மிவி

உள்ளூர் எலக்ட்ரானிக் கேஜெட் பிராண்டான மிவி நிறுவனம் மூன்று புதிய போர்ட்டபிள் வயர்லஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. ஓடவே, மான்ஸ்டோன் மற்றும் ரோமன் என்ற பெயர் கொண்ட இந்த ஸ்பீக்கர்கள் முறையே 1.699, 2,299 மற்றும் 2,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஓடவே, மான்ஸ்டோன் மற்றும் ரோமன் போன்றவை புதிய தொழில்நுட்பத்தில், நீண்ட நாட்கள் உழைக்கக்குடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை எடை குறைவானவும், எளிதாக எடுத்து செல்லும் வகையிலும் இருக்கும். அதுமட்டுமின்றி வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டதாக இருக்கும் என்று மிவி நிறுவன மார்க்கெட்டிங் அதிகாரி மற்றும் நிறுவனர் மிதுலா தேவபாக்துனி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 3 புதிய போர்ட்டபிள் வயர்லஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது மிவி

ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய ஸ்பீக்கர்கள், 10 மீட்டர் ப்ளூடூத் ரேன்ஜ் கொண்டதாகவும், உண்மையான வயர்லெஸ் கனெக்சன் சிஸ்டம் கொண்டத்காவும் இருக்கும் என்றும் மிவி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியா இணைய தளத்தில் இந்த ஸ்பீக்கர்களை பிளாக் மற்றும் கிரே கலரில் கிடக்கிறது என்றும் அந்த அறிக்கையில் மிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.