வியட்நாம் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மொபிஸ்டார் மொபைல் போன் தயாரிப்பாளர், இந்தியாவில் ரூ. 4,999 க்கு மொபிஸ்டார் CQ மற்றும் ரூ. 7999க்கு மொபிஸ்டார் XQ டூயல் என்ற இரு மொபைல் போன்களை வெளியிட்டுள்ளது.

மொபிஸ்டார்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மிகவும் சவாலான விலையில் மொபைல்களை வெளியிட்டு வரும் நிலையில் சீனாவின் குறைந்த விலை மொபைல்களுக்கு எதிராக வியட்நாமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மொபிஸ்டார் இரண்டு பட்ஜெட் ரக மொபைல்களை வெளியிட்டடுள்ளது.

மொபிஸ்டார் CQ

5 அங்குல ஹெச்டி திரையை பெற்றதாக 2.75D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் விளங்குகின்ற மொபிஸ்டார் CQ போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் கொண்டு 2ஜிபி ரேம் பெற்று 16ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக விளங்குகின்றது.

பின்புறத்தில் ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13 மெகாபிக்சல் சென்சார் பெற்ற கேமரா மற்றும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்பற்றிய சிக்யூ போனில் 4ஜி வோல்டிஇ மற்றும் விஐஎல்டிஇ ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 4,999 க்கு மொபிஸ்டார் CQ மொபைல் கிடைக்கின்றது.

மொபிஸ்டார் XQ டூயல்

5.5 அங்குல ஹெச்டி திரையை பெற்றதாக 2.75D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் விளங்குகின்ற மொபிஸ்டார் CQ போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் பெற்று 32 ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக விளங்குகின்றது.

முன்புறத்தில் ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் பெற்ற கேமரா மற்றும் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்பற்றிய எக்ஸ்க்யூ போனில் 4ஜி வோல்டிஇ மற்றும் விஐஎல்டிஇ ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 7,999 க்கு மொபிஸ்டார் XQ டூயல் மொபைல் கிடைக்கின்றது.

வருகின்ற மே 30ந் தேதி முதல் ஃபிளிப்கார்ட் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.