ஐடி பெரிபெரல்ஸ் மற்றும் மொபைல் அசிஸ்சொரிஸ் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ரம் தனது புதிய தயாரிப்பு தொழிற்சாலைஇய திருப்பதியில் தொடங்க உள்ளது. இதற்காக இந்த நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. புதிய தொழிற்சாலை தொடங்குவதன் மூலம் 1000 புதிய வேலை வாய்புகள் உருவாகும் என்று தெரிய வந்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியில் புதிய இன்னோவேஷன் மற்றும் டிசைன் மையத்தை உருவாக்க ஆஸ்ட்ரம் நிறுவனம் LKKER இன்னோவேஷன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகியுள்ளது.

இந்த புதிய தயாரிப்பு தொழிற்சாலை குறித்து பேசிய ஆஸ்ட்ரம் இந்தியா நிறுவன இயக்குனர் மனோஜ் குமார் பன்சாரி,LKKER இன்னோவேஷன் நிறுவனத்துடன் பார்ட்னர் ஷிப்பில், புதிய டிசைன் பெஞ்ச் மார்க்கை உருவாக்குவோம். இதன் மூலம் எங்கள் நிறுவன பொருட்களில் பல்வேறு மேம்பாடுகளை செய்வதுடன், புதிய டிசைனிலும் தயார் செய்யப்பட உள்ளது என்றார்.

ஆஸ்ட்ரம் நிறுவனம் ஆடியோ டிவைஸ்கள், LED லைட்கள், மொபைல் போன்களுக்கான அசிஸ்சொரிஸ், கம்ப்யூட்டர் காம்போனென்ட்கள் மற்றும் கேமிங் கண்ட்ரோலர்களை தயாரித்து வருகிறது.