மோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மோட்டோ E5 பிளே மொபைல்கள் அறிமுகம்

லெனோவா நிறுவனத்தின் கீழ் செயல்படும் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 மொபைல் அறிமுகத்தின் போது 18:9 திரை விகிதம் பெற்ற மோட்டோ E5 வரிசை மொபைல்களில் மோட்டோ E5, மோட்டோ E5 பிளஸ், மற்றும் மோட்டோ E5 பிளே ஆகிய மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ E5

பிரேசிலில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மோட்டோ இ5 மொபைல் போனில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பெற்று 5.7 அங்குல ஐபிஎஸ் டிஸ்பிளேவினை கொண்டு வடிவமைக்கப்பட்டு குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் பெற்று 2ஜிபி ரேம் 16 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் விளங்குகின்றது.

கேமரா துறையில் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் இணைக்கப்பட்டு முன்புறத்தில் 5 மெகாகபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு 4000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது. இதிலை வைஃபை, 4ஜி எல்டிஇ, ப்ளூடுத் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

மோட்டோ E5  மொபைல் விலை ரூ. 12,300

மோட்டோ E5 பிளஸ்

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பெற்று 6 அங்குல ஐபிஎஸ் டிஸ்பிளேவினை கொண்டு வடிவமைக்கப்பட்டு குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் பெற்று 3 ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் விளங்குகின்றது.

கேமரா துறையில் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் சென்சார் இணைக்கப்பட்டு முன்புறத்தில் 8 மெகாகபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு 5000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது. இதிலை வைஃபை, 4ஜி எல்டிஇ, ப்ளூடுத் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

மோட்டோ E5 பிளஸ் மொபைல் விலை ரூ. 13,900

மோட்டோ E5 பிளே

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பெற்று 5.2 அங்குல ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் 16:9 திரை விகிதம்  கொண்டு வடிவமைக்கப்பட்டு குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் பெற்று 2ஜிபி ரேம் 16 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் விளங்குகின்றது.

கேமரா துறையில் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் இணைக்கப்பட்டு முன்புறத்தில் 5 மெகாகபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு 2800mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது. இதிலை வைஃபை, 4ஜி எல்டிஇ, ப்ளூடுத் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

மோட்டோ E5 பிளே மொபைல் விலை ரூ. 9,900