செப்டம்பர் 23.., மோட்டோ E7 பிளஸ் விற்பனைக்கு வெளியாகிறது

வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட உள்ள மோட்டோ E7 பிளஸ் மொபைலை ஃப்ளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வெளியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரேசிலில் வெளியிடப்பட்ட மாடலின் அடிப்படையில் 5,000mAh, டூயல் கேமரா பெற்று ரூ.10,000 விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

மோட்டோ இ7 பிளஸ்

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றி வரவுள்ள மோட்டோ E7 பிளஸ் போனில்  6.5 அஙுகுல  HD+ வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் மூலம் இயக்கப்பட்டு, 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பை கொண்டிருக்கும்.

5,000mAh பேட்டரியுடன் டூயல் கேமரா ஆப்ஷனில் பிரைமரி சென்சார் 48 எம்பி மற்றும் 2 எம்பி டெப்த் சென்சாரை பெற்றிருக்கும். செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 எம்பி சென்சாருடன் வரவுள்ளது. கூடுதல் விருப்பங்களில் 4G, ப்ளூடூத் 5.0, வை-ஃபை 802.11 b/g/n, ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி மற்றும்  3.5mm ஹெட்போன் ஜாக் இடம்பெற்றுள்ளது.

ரூ.10,000-ரூ.12,000 விலைக்குள் வரவுள்ள மோட்டோ E7 பிளஸ் செப்டம்பர் 23 ஆம் தேதி பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் விலை ரியல்மி C11 மொபைல் எதிர்பார்ப்புகள் என்ன ?