ரூ.9,499 விலையில் மோட்டோ E7 பிளஸ் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மோட்டோ E7 பிளஸ் 5000mAh பேட்டரியுடன் 10W ஃபாஸ்ட் சார்ஜருடன் டூயல் கேமரா பெற்று ரூ.9,499 ஆக விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ஃபிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

மோட்டோ E7 பிளஸ்

மோட்டோ E7 பிளஸ் போனில் 6.5 அஙுகுல மேக்ஸ் விஷன் 20:9 விகிதம் பெற்ற வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் மூலம் இயக்கப்பட்டு, 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பை கொண்டிருக்கும். கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் நீட்டிக்கலாம்.

டூயல் கேமரா ஆப்ஷனில் பிரைமரி சென்சார் 48 மெகாபிக்சல் சென்சாருடன், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரை பெற்றிருக்கும். செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் சென்சாருடன் வந்துள்ளது.

கூடுதல் விருப்பங்களில் பின்புறத்தில் கைரேகை சென்சார், 4G, ப்ளூடூத் 5.0, வை-ஃபை 802.11 b/g/n, ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி மற்றும்  3.5mm ஹெட்போன் ஜாக் இடம்பெற்றுள்ளது. 200 கிராம் எடை கொண்ட மோட்டோ E7 பிளஸ் மாடலில் 10 வாட்ஸ் விரைவு சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரியை பெற்றுள்ளது.