ரூ.20,999 விலையில் Moto G 5G விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக Moto G 5G விற்பனைக்கு ரூ.20,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட மொபைல் என மோட்டோரோலா நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் விற்பனை டிசம்பர் 7 ஆம் தேதி பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட் மூலம் துவங்கப்படுகின்றது.

Moto G 5G மொபைல் சிறப்புகள்

புதிய Moto G 5G மாடல் 6.67 அங்குல முழு எச்டி+ பெற்று 2400 x 1080 பிக்சல் தீர்மானத்துடன் வருகிறது. இந்த மாடலை இயக்குவதற்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G சிப்செட் பயன்படுத்தப்பட்டு, இது 5 ஜி ஆதரவு கொண்ட சிப்செட் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி  சேமிப்பு உள்ளது. கூடுதலாக மைக்ரோ எஸ்.டி கார்டின் உதவியுடன் அதிகபட்சமாக 1TB வரை விரிவுப்படுத்தலாம்.

முதன்மை கேமரா செட்டப்பில் டிரிப்ள் கேமரா ஆப்ஷன் வழங்கப்பட்டு பிரைமரி 48 எம்பி லென்ஸ் உடன் 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சாருடன் சிறப்பான புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய உதவுகின்றது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16MP சென்சார் உள்ளது.

மோட்டோ ஜி 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மூலம் செயல்படுத்தப்பட்டு 20W ஃபாஸ்ட் சார்ஜருடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.  5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எஃப்சி, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.

5ஜி வேகம்

இந்திய சந்தையில் 5ஜி சேவை அடுத்த ஆண்டில் துவங்கப்பட வாய்ப்புள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள மோட்டோ ஜி 5ஜி மாடல் பற்றி இந்நிறுவனம் குறிப்பிடுகையில், “மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் 11 சர்வதே 5ஜி நெட்வொர்க் பேண்டுகளிலும் செயல்படுவதுடன்,  இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்ற எந்த SUB6 5ஜி பேண்டிற்கும் ஏற்றதாக இருப்பதை உறுதி செய்கின்றது. மோட்டோ ஜி 5ஜி உலகளவில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான சப் 6 அலைக்கற்றையுடன் இணக்கமானது. இதன் காரணமாக மிக விரைவான தரவு வேகத்தை உறுதி செய்கிறது.

மோட்டோ G 5G விலை

மோட்டோ ஜி 5ஜி மொபைல் இந்தியாவில்  6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒற்றை வேரியண்டின் விலை ரூ .20,999 ஆகும்.  கிரே மற்றும் சில்வர் என இரு நிறங்களில் கிடைக்க உள்ளது.

சிறப்பு அறிமுக சலுகையாக எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்குவோருக்கு உடனடியாக ரூ.1000 வரை விலை குறைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

web title : Moto G 5G smartphone launched price and specs details