இந்தியாவில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம், புதிய மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனினை ரூ.16,999 விலையிலும், மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போனை ரூ.13,999 விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இரு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ரீடெயிலர் வாயிலாக இன்று முதல் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. மேலும் சிறப்பு சலுகையாக ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம், ரூ. 198 மற்றும் ரூ. 299 பிளான்களை ரீசார்ஜ் செய்தால் 44 முறைகளில் ரூ.2,200 வரை கேஸ்பேக் சலுகையை வழங்குகின்றது.

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் சிறப்புகள்

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் வாட்டர் டிராப்  6.24 அங்குல திரை பெற்று 1080×2270 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்ட மேக்ஸ் விஷன் டிஸ்பிளேவுடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்ற்றி வந்துள்ள இந்த போனில் குவால்காம் வழங்குகின்ற 1.8GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட் 632 SoC  கொண்டு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக 512 ஜிபி வரை மெமரி விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

15W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 3000mAh பேட்டரி பெற்ற மோட்டோ ஜி 7 மொபைலின் கேமரா பிரிவில் பிரைமரியாக டுயல் கேமரா செட்டப் கொண்டு 12 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் பெற்றுள்ளது. செல்பி மற்றும் வீடியோ காலிங் சேவையை பெற முகப்பில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

மோட்டோரோலா ஒன் போனின் வசதிகள்

5.99 அங்குல திரை பெற்று 1080×2270 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்ட மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை பின்ற்றி வந்துள்ள இந்த போனில் குவால்காம் வழங்குகின்றது. ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட் 625 SoC  கொண்டு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக 256 ஜிபி வரை மெமரி விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

கேமரா பிரிவில் பிரைமரியாக டுயல் கேமரா செட்டப் கொண்டு 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் பெற்றுள்ளது. செல்பி மற்றும் வீடியோ காலிங் சேவையை பெற முகப்பில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 3000mAh பேட்டரி பெற்றதாக மோட்டோரோலா ஒன் போன் விளங்குகின்றது.

மோட்டோரோலா ஒன்