ரூ.13,999க்கு மோட்டோ ஜி7 பவர் விற்பனைக்கு கிடைக்கும்

இந்தியாவில் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் நாளை முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.  டூயல் ரியர் கேமரா பெற்ற மோட்டோ ஜி7 போனில் சக்தி வாய்ந்த 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது.

மோட்டோ ஜி7 பவர்

இந்திய சந்தையில் வெளியிடபட்டுள்ள மோட்டோ ஜி7 வரிசை மாடலில் உள்ள மோட்டோ ஜி7 பவர் மொபைல் ஃபோனில் 6.2 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரை பெற்று 720×1520 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்ட மேக்ஸ் விஷன் டிஸ்பிளேவினை பெற்றுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்ற்றி வந்துள்ள போனில் குவால்காம் வழங்குகின்ற 1.8GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட் 632 SoC  கொண்டு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக 128 ஜிபி வரை மெமரி விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

கேமரா பிரிவில் பிரைமரியாக 12 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு எல்இடி ஃபிளாஷ் பெற்றிருக்கும். செல்பி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு முகப்பில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றி வந்துள்ள இந்த போனில் சக்தி வாய்ந்த 5,000mAh பேட்டரி கொண்டதாக ஜி7 பவர் மொபைலில் விரைவாக சார்ஜ் ஆகின்ற டர்போ சார்ஜர் அம்சம் நிரந்தரமாக வந்துள்ளது.

ரூ.13,999க்கு மோட்டோ ஜி7 பவர் விற்பனைக்கு கிடைக்கும்

இந்தியாவில் நாளை முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ள மோட்டோ ஜி7 பவர் விலை ரூ.14,500 நிர்ணயம் செய்யப்பட்டு அறிமுக விலையாக ரூ.13,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.13,999க்கு மோட்டோ ஜி7 பவர் விற்பனைக்கு கிடைக்கும்