மோட்டோ ஜி9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி

இந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனம் அடுத்த ஸ்மார்ட்போன் ஜி9 பவர் மாடலை டிசம்பர் 8 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. முன்பாக இந்த மொபைல் ஐரோப்பா சந்தையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு கொண்டு பிரைமரி கேமரா ஆப்ஷனில் 64 எம்பி சென்சாரை கொண்டுள்ளது.

டிசம்பர் 8 ஆம் தேதி ஃபிளிப்கார்ட் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ள இந்த மாடலில் ஒற்றை வேரியண்ட் மட்டும் இடம்பெற்றிருக்கலாம்.

மோட்டோ ஜி9 பவர் சிறப்புகள்

சர்வதேச அளவில் கிடைக்கின்ற மோட்டோ ஜி9 பவர் மொபைலின் அடிப்படையில் 6.8 இன்ச் எச்டி + மேக்ஸ் விஷன் திரையுடன் 1640 x 720 பிக்சல் தீர்மானத்தை கொண்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் பெற்று 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்புடன் கூடுதலாக 512ஜிபி விரிவுப்படுத்தக்கூடிய எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றி செயல்படுகின்ற மாடலில் டிரிப்ள் கேமரா ஆப்ஷன் கொடுக்கப்பட்டு பிரைமரி ஆப்ஷனில் 64 எம்பி, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் உள்ளது. முன்புறத்தில் 16 எம்பி கேமரா செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு கிடைக்கின்றது.

பிரத்தியேகமான கூகுள் அசிஸ்டென்ட் பொத்தான் கொடுக்கப்பட்டு, 6000mAh பேட்டரியுடன் 20W விரைவு சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. டூயல் சிம் கார்டு வசதியுடன் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, GPS/ GLONASS/ Beidou, யூஎஸ்பி Type-C ஆகியவற்றை பெற்றுள்ளது.