ரூ.11,999 விலையில் Moto G9 Power விற்பனைக்கு வெளியானது

மோட்டோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் G9 Power மாடல் ரூ.11,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 64 எம்பி பிரைமரி சென்சாருடன் டிரிப்ள் கேமரா ஆப்ஷனை பெற்றதாக அமைந்துள்ளது.

பிரத்தியேகமான கூகுள் அசிஸ்டென்ஸ் பொத்தான் கொடுக்கப்பட்டு, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான My UX இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

Moto G9 Power மொபைல் சிறப்புகள்

மோட்டோ ஜி9 பவர் மொபைலில் 6.8 அங்குல எச்டி+ மேக்ஸ் விஷன் திரையுடன் 1640 x 720 பிக்சல் தீர்மானத்தை கொண்டுள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் பெற்று 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் கூடுதலாக 512ஜிபி விரிவுப்படுத்தக்கூடிய எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

ஜி9 பவர் போனில் பிரைமரி ஆப்ஷனில் 64 எம்பி, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் டிரிப்ள் கேமரா ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 16 எம்பி கேமரா f/2.25 துளை பெற்ற செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு கிடைக்கின்றது.

6000mAh பேட்டரியுடன் 20W விரைவு டர்போ சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. டூயல் சிம் கார்டு வசதியுடன் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, GPS/ GLONASS/ Beidou, யூஎஸ்பி Type-C ஆகியவற்றை பெற்றுள்ளது.

மோட்டோ ஜி 9 பவர் மெட்டாலிக் சேஜ் மற்றும் எலக்ட்ரிக் வயலட் வண்ணங்களில் கிடைக்கின்ற நிலையில், பிளிப்கார்ட்டில் டிசம்பர் 15 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.