மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய படைப்பான மோட்டோ ஒன் பவர் ஆனது இந்தியாவில் ரூ.15,990-க்கு அறிமுகமானது.

பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான மோட்டோரோலா தனது புதவரவான மோட்டோ ஒன் பவர் மொபைலினை பெர்லினில் நடைப்பெற்ற IFA 2018 நிகழ்ச்சில் மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது இந்த மொபைலினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த மொபைல் இந்திய சந்தையில் ரூ. 15,990-க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மொபைல் ஆனது வரும் அக்டோபர் 5-ஆம் நாள் முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஒன் பவர் பற்றி சில முக்கிய தகவல்கள்…

6.2″ (17.5cm) தொடுதிரை
Qualcomm Snapdragon 636 1.8GHz octa-core செயலி
64GB உள்நினைவகம் (256GB வரை நீட்டிக்க கூடியது)
5000 mAh பேட்டரி
16 MP இரட்டை பின் கேமிரா + 12 MP முன் கேமிரா
Android, v8.1 இயங்குதளம்
இரட்டை சிம், VoLTE, 4G, 3G, Wi-Fi, NFC என பல சிறப்பம்சங்களுடன் வெளிவருகின்றது.