மோட்டோ ரேசர் (2019) கான்செப்ட் படங்கள் வெளியானது

மோட்டோரோலா மொபைல் தயாரிப்பாளரின், மோட்டோ ரேசர் மாடலின் அடிப்படையில் நவீன அம்சங்களை பெற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக வெளியாக வாய்ப்புள்ளது. ரென்டரிங் செய்யப்பட்ட ரேசர் படங்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த ஸ்மார்ட்போன் தலைமுறையாக வடிவமைக்கப்பட்ட உள்ள மடிக்ககூடிய வகையிலான மொபைல் மீதான ஆர்வத்தை மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், ரேசர் தொடர்பான மடிக்கும் வகையிலான காப்புரிமை படங்களை பின்பற்றி வெளியான சில ரென்டரிங் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்துள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ரேசர் மொபைல் போன் வருவது தொடர்பான செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதுபற்றி பல்வேறு விபரங்கள் கசிந்த வண்ணம் உள்ளது. இந்த முறை வரவுள்ள மொபைல் விலை மிகவும் அதிகமாக அமைந்திருக்கும். இயல்பாக தொடு திரையை மடிக்கும் வகையில் அமைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.

மோட்டோ ரேசர் (2019) கான்செப்ட் படங்கள் வெளியானது

மோட்டோ ரேசர் போனில் குவால்காம் 855 சிப்செட் கொண்டு 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் என இருவிதமான மாறுபாடுகளில் வெளியாகியது. இந்த மடிக்கூடிய போன் பெரும்பாலானோரின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த மொபைல் போன் விலை 1600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,12,000) ஆகும்.

இணைக்கப்பட்டுள்ள வீடியோ மற்றும் படங்கள் yanko design அனைத்தும் கான்செப்ட் கொண்ட கணினி முறையில் வடிவமைத்துள்ளனர். ஆனால் உற்பத்தி நிலை மாடல் குறித்து எந்த அதிகார்வப்பூர்வ விபரத்தை இதுவரை வெளியிடவில்லை.