மோட்டோ X4 மொபைலின் 6ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.24,999மோட்டோரோலா இந்தியா நிறுவனம், இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய மோட்டோ எக்ஸ்4 விற்பனைக்கு ரூ.24,999 விலையில் அறிமுகம் ஃபிளிப்கார்ட் தளத்தில் செய்யப்பட்டுள்ளது. கூடுலாக வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து 490 ஜிபி வரை கூடுதலான டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.

மோட்டோ X4 மொபைல்

மோட்டோ X4 மொபைலின் 6ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.24,999

தற்போது இந்தியாவில் மோட்டோ எக்ஸ் 4 மாடலில் 3ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளீட்டு சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் 64 ஜிபி உள்ளீட்டு சேமிப்பு கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக புதிய 6ஜிபி ரேம் வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

டிசைன் & டிஸ்பிளே

கருப்பு மற்றும் நீலம் ஆகிய இரு நிறங்களில் 5.2 அங்குல எல்டிஎஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது

பிராசெஸர் & ரேம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 ஆக்டோ கோர் பிராசெஸர் கொண்டு இயக்கப்பட்டு 3GB ரேம் உடன் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 4GB ரேம் உடன் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்ற மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், புதிதாக 6ஜிபி ரேம் கொண்ட மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கேமரா துறை

DSLR தரத்திலான புகைப்படங்களை வழங்கும் திறன் பெற்ற இரட்டை ஆட்டோஃபோகஸ் கொண்ட 12+8 மெகாபிக்சல் சென்சார் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களை எதிர்கொள்ள 16 மெகாபிக்சல் சென்சார் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற மோட்டோ எக்ஸ்4 மொபைல் போன் பேட்டரி மிக வேகமான டர்போபவர் சார்ஜர் நுட்பத்துடன் கூடிய 3,000mAh  பேட்டரியால் இயக்கப்படுகின்றது.

மோட்டோ X4 மொபைலின் 6ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.24,999

மற்றவை

4G வோல்ட்இ, ப்ளூடூத் v5.0, டூயல் பேன்ட் (2.4GHz மற்றும் 5GHz) வை-ஃபை 802.11 a/b/g/n/ac, GPS/ A-GPS, யூஎஸ்பி டைப் -சி, என்எஃப்சி, பன்பலை ரேடியோ ஆகிய வசதிகளை துனை விருப்பங்களாக இணைத்துள்ளது.

விலை

3ஜிபி ரேம் 32ஜிபி சேமிப்பு பெற்ற மோட்டோ எக்ஸ்4 ரூ.20,999 விலையில், 4ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு பெற்ற மோட்டோ எக்ஸ்4 ரூ.22,999 விலையில் விற்பனைக்கு கிடைத்து வருகின்ற நிலையில் புதிய 6ஜிபி ரேம் வேரியன்ட் ரூ.24,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

சலுகை விபரம்

ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் ஜனவரி 31ந் தேதி இரவு 11.59 மணிக்கு விற்பனை தொடங்கப்பட உள்ள இந்த மாடலுக்கு ரூ.199 அல்லது அதற்கு கூடுதலான தொகையில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 490ஜிபி கூடுதல் வழங்கப்பட உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு 1500 ரூபாய் சலுகை, மற்றும் ரூ.3000 வரை எக்ஸ்சேஞ் சலுகை மற்றும் ஏர்டெல் பயனாளர்களுக்குரூ.349 அல்லது அதற்கு கூடுதலான ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 15ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here