ஆண்ட்ராய்டு ஒன் அடிப்படையிலான மோட்டோ X4 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருவது டுவிட்டர் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ X4 மொபைல்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடிப்படையில் கூகுள் நிறுவன எளிமையான ஓஎஸ் எனப்படுகின்ற ஆண்ட்ராய்டு ஒன் மீண்டும் சியோமி வாயிலாக சந்தைக்கு வந்து புத்துயிர் தந்துள்ளது.

சமீபத்தில் பிரபல லீக்ஸ்டார் எவன் பிளாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மோட்டோ எக்ஸ்4 மாடலின் பின்புறத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஆண்ட்ராய்டு ஒன் லோகோ இருப்பதன் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

5.2 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 1080×1920 பிக்சல் தீர்மானத்துடன் எல்டிபிஎஸ் எல்சிடி பெற்றதாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸருடன் 3ஜி மற்றும் 4ஜி ரேம் வசதியுடன் 32ஜிபி அல்லது 64ஜிபி ஆகிய வசதிகளுடன் கிடைக்கலாம்.

பின்புறத்தில் இரட்டை கேமரா பிரிவு கொண்டதாக உள்ள இந்த மாடலில் 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றுடன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் ஆரம்பத்தில் தொடக்கநிலை மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், கார்பன் மற்றும் ஸ்பைஸ் ஆகிய மொபைல்களுடன் வந்த நிலையில், தற்போது இரட்டை கேமரா பெற்ற சியோமி மி ஏ1 மொபைல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.