டூயல் கேமரா வசதி கொண்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போன் அறிமுகம்ரூ.20,999 ஆரம்ப விலையில் மோட்டோ X4 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா வசதி கொண்டதாக இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இன்றிரவு 11:59PM மணிக்கு ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் பிரத்தியேகமாக விற்பனையை தொடங்க உள்ளது.

மோட்டோ X4 ஸ்மார்ட்போன்

டூயல் கேமரா வசதி கொண்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போன் அறிமுகம்

நீர் மற்றும் தூசு சார்ந்த பாதுகாப்பினை வழங்கும் IP68 தரச்சான்றிதழ் பெற்ற எக்ஸ்4 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்படாலும், அடுத்த சில வாரங்களில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதள மேம்பாடு வழங்கப்பட உள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

சூப்பர் பிளாக் மற்றும் ஸ்டெர்லிங் நீலம் ஆகிய இரண்டு நிறங்களை கொண்டதாக 5.2 அங்குல எல்டிஎஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிராசெஸர் & ரேம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 ஆக்டோ கோர் பிராசெஸர் கொண்டு இயக்கப்பட்டு 3GB ரேம் உடன் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 4GB ரேம் உடன் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை கொண்டிருக்கின்றது.

கேமரா துறை

DSLR தரத்திலான புகைப்படங்களை வழங்கும் திறன் பெற்ற இரட்டை ஆட்டோஃபோகஸ் கொண்ட 12+8 மெகாபிக்சல் சென்சார் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களை எதிர்கொள்ள 16 மெகாபிக்சல் சென்சார் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டூயல் கேமரா வசதி கொண்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போன் அறிமுகம்

பேட்டரி

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற மோட்டோ எக்ஸ்4 மொபைல் போன் பேட்டரி மிக வேகமான டர்போபவர் சார்ஜர் நுட்பத்துடன் கூடிய 3,000mAh  பேட்டரியால் இயக்கப்படுகின்றது.

மற்றவை

4G வோல்ட்இ, ப்ளூடூத் v5.0, டூயல் பேன்ட் (2.4GHz மற்றும் 5GHz) வை-ஃபை 802.11 a/b/g/n/ac, GPS/ A-GPS, யூஎஸ்பி டைப் -சி, என்எஃப்சி, பன்பலை ரேடியோ ஆகிய வசதிகளை துனை விருப்பங்களாக இணைத்துள்ளது.

விலை

3ஜிபி ரேம் 32ஜிபி சேமிப்பு பெற்ற மோட்டோ எக்ஸ்4 ரூ.20,999 விலையில், 4ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு பெற்ற மோட்டோ எக்ஸ்4 ரூ.22,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் கேமரா வசதி கொண்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போன் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here