மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ பிராண்டின் பிரசத்தி பெற்ற மோட்டோ இசட் மாடலின் பெர்ஃபாமென்ஸ் ரக புதிய மோட்டோ Z2 ஃபோர்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசத்தலான மோட்டோ Z2 ஃபோர்ஸ் அறிமுகம்.!

மோட்டோ Z2 ஃபோர்ஸ்

அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள புதிய மோட்டோ இசட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுடன் கூடுதலாக புதிய மோட்டோ மாட்ஸ்களும் வெளியிடப்பட்டுள்ளது.

அசத்தலான மோட்டோ Z2 ஃபோர்ஸ் அறிமுகம்.!

டிசைன் & டிஸ்பிளே

மிக நேர்த்தியான தட்டையான வடிவமைப்புடன் கூடிய டிஸ்பிளேவை பாதுகாக்கும் ஷேட்டர்ஷீல்டு பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய Z2 ஃபோர்ஸ் 7000 சீரிஸ் அலுமினியம் கொண்டு வடிவமைப்பில் உறுதியான கட்டுமானத்தை கொண்டதாக வந்துள்ளது.

5.5 இன்ச் QHD தரத்தை பெற்ற சூப்பர் AMOLED ஷேட்டர்ஷீல்டு அம்சத்துடன் கூடிய 1440×2560 பிக்சல் டிஸ்ப்ளே பெற்றதாக வந்திருப்பதுடன் ,   மோட்டோ மாட்ஸ் இணைப்பதற்கான போகோ பின் கனெக்டர்கள் வசதி பேக் பேனலில் இடம்பெற்றுள்ளது.

அசத்தலான மோட்டோ Z2 ஃபோர்ஸ் அறிமுகம்.!

பிராசஸர் & ரேம்

தற்போது சந்தையில் உள்ள மிக பவர்ஃபுல்லான  2.35GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் பெற்ற மோட்டோ இசட்2 ஃபோர்ஸ் மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி என இரு ரேம்களில் 4ஜிபி மாடலில் 64ஜிபி உள்ளடங்கிய மெமரி மற்றும் 6ஜிபி மாடலில் 128ஜிபி உள்ளடங்கிய மெமரி பெற்றதாக வந்துள்ளது. கூடுதலான சேமிப்பினை நீட்டிக்கும் வகையில் 256GB திறன் பெற்ற மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

அசத்தலான மோட்டோ Z2 ஃபோர்ஸ் அறிமுகம்.!

கேமரா துறை

ஆண்ட்ராய்டு நௌகட் 7.1 இயங்குதளத்தில் செயல்படுகின்ற இசட்2 ஃபோர்ஸ் மொபைலில் ஆர்ஜிபி மற்றும் மோனோக்ரோம் போன்ற சென்சார் வசதியுடன் கூடிய , புகைப்படங்களை எடிட் செய்யும் வசதிகள், குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும் சிறப்பான படங்களை பெறவும், இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ் , ஆட்டோஃபோகஸ் போன்றவற்றுடன் கூடிய இரட்டை 12 மெகாபிக்சல் கேமரா பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபீ படங்களை எதிர்கொள்ளும் எல்இடி ஃபிளாஷ் பெற்ற 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

நீக்க இயலாத வகையிலான 2,730mAh திறன் பெற்ற பேட்டரியுடன் மிக வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான டர்போ சார்ஜ் நுட்பத்துடன் கூடிய அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது.

அசத்தலான மோட்டோ Z2 ஃபோர்ஸ் அறிமுகம்.!

மற்றவை

4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் யூஎஸ்பி சி போர்ட் போன்றவற்றுடன் கூடிய அம்சத்தை இந்த மொபைல் பெற்றுள்ளது. 3.5 mm ஆடியோ ஜாக் வழங்கப்பட வில்லை

விலை

அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மோட்டோ Z2 ஃபோர்ஸ்  விலை $799.99 ( ரூ.51,536). இந்தியா வருகை விபரம் குறித்து அதிகார்வப்பூர்வ தகவல் இல்லை.

மோட்டோ மாட்ஸ்

5 விதமான மோட்டோ மாட்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;-

மோட்டோ 360 கேமரா மாட் – 360 டிகிரி கோணத்தில் படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்யும் வசதி

மோட்டோ கேம்பேட் – கேம்பேடாக மாற்றும் வகையிலான மோட்டோ மாட்

JBL சவுண்ட் பூஸ்டர் – ம்யூசிக் சிஸ்டத்திற்கு என பிரத்தியேக JBL சவுண்ட் பூஸ்டர் மாட்

மோட்டோ டர்போ மாட் – கூடுதலான பேட்டரி பெற உதவும் மாட்ஸாகும்.

மேட்டோ ஸ்டைல் ஷெல் – வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும் மாட்ஸ் ஆகும்.

மோட்டோ Z2 ஃபோர்ஸ் 2 நுட்ப விபரம்
வசதிகள் மோட்டோ Z2 ஃபோர்ஸ்
டிஸ்பிளே 5.5 இன்ச் ஹெச்டி
பிராசஸர் குவால்காம் 835 SoC
ரேம் 4GB/6GB
சேமிப்பு 64GB/128GB
பின் கேமரா டூயல் 12MP
முன் கேமரா 5MP
ஓஎஸ் ஆண்ட்ராய்டு 7.1
பேட்டரி 2730mAh
ஆதரவு இருசிம், 4G VoLTE, புளூடுத், ஜிபிஎஸ், வை-ஃபை
விலை $799.99 ( ரூ.51,536)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here