இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள அடுத்த மாடலின் டீசர் ‘Hello #Smarterphone’.என வெளியடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்டர்போன் டீசர் யூடியூப் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஹலோ #Smarterphone டீசர் வெளியீடு

எனவே விரைவில் மோட்டோ G5s அல்லது மோட்டோ C அல்லது மோட்டோ Z2 அல்லது மோட்டோ X4 போன்ற மாடல்களில் ஏதேனும் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹலோ #Smarterphone

மோட்டோரோலா வெளியிட்டுள்ள யூடியூப் வீடியோ டீசரில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் ஸ்கீரின் மற்றும் ஸ்பீக்கர்கள் குறித்து உயர்வாக சித்தரித்து வெளியிட்டுள்ளது.

 

 

 

சமீபத்தில் சர்வதேச அளவில் சில நாடுகளில் மோட்டோ சி பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் இந்த மொபைல் ஐரோப்பா நாடுகளுக்கு முதற்கட்டமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஹலோ #Smarterphone டீசர் வெளியீடு

ஸ்பீக்கர் மற்றும் ஸ்கீரின் என இரண்டுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால்  மோட்டோ இ4 சீரிஸ் அல்லது மோட்டோ ஜி5எஸ் மாடலாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மோட்டோ E4 சீரிஸ்

இந்த மோட்டோ E4 மற்றும் மோட்டோ E4 ப்ளஸ் 5 இன்ச் மற்றும் 5.5 இன்ச் என இருவிதமான திரை வசதியுடன் 5000mAh பேட்டரி திறன் கொண்டதாக விளங்குகின்றது.

மோட்டோ G5s சீரிஸ்

மோட்டோ ஜி5எஸ் மற்றும் மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ் 5.2 இன்ச் மற்றும் 5.5 இன்ச் என இருவிதமான திரை வசதியுடன் கிடைக்கும் மாடலாகும். அவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் அல்லது மோட்டோ X4 சீரிஸ் மாடலாகவும் இருக்கலாம்.

இந்த மாத இறுதியில் புதிய மோட்டோ ஸ்மார்டர்போன் வெளியிடப்பட உள்ளது.

https://youtu.be/QtqmxQ7SKaI

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here