மோட்டோரோலா நிறுவனம், மோட்டோ ஜி7 , மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பவர் மற்றும் மோட்டோ ஜி7 பிளே என மொத்தம் நான்கு ஸ்மார்ட்போனைகளும் நாள் முழுமைக்கான பேட்டரி ஆயுளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பிரேசில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள மோட்டோ ஜி7 வரிசை மொபைல்கள் மெக்சிக்கோ நாட்டிலும் விற்பனைக்கு வருவதனை தொடர்ந்து இந்தியா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

மோட்டோ ஜி7 விவரக்குறிப்புகள்

வெளியிடப்பட்டுள்ள மோட்டோ ஜி7 மொபைல் போனில் 6.24 அங்குல திரை பெற்று 1080×2270 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்ட மேக்ஸ் விஷன் டிஸ்பிளேவுடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்ற்றி வந்துள்ள இந்த போனில் குவால்காம் வழங்குகின்ற 1.8GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட் 632 SoC  கொண்டு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக 128 ஜிபி வரை மெமரி விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

15W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 3000mAh பேட்டரி பெற்ற மோட்டோ ஜி 7 மொபைலின் கேமரா பிரிவில் பிரைமரியாக டுயல் கேமரா செட்டப் கொண்டு 12 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் பெற்றுள்ளது. செல்பி மற்றும் வீடியோ காலிங் சேவையை பெற முகப்பில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி7 பிளஸ் விவரக்குறிப்புகள்

பிரேசில் நாட்டில் வெளியிடப்பட்டுள்ள மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.24 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரை பெற்று 1080×2270 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்ட மேக்ஸ் விஷன் டிஸ்பிளேவினை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட மென்பொருளுடன் குவால்காம் வழங்குகின்ற 1.8GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட் 636 SoC  கொண்டு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக 512 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி மூலம் மெமரி விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

மிக விரைவாக சார்ஜிங் செய்வதற்கு என 27W டர்போ சார்ஜர் கொண்ட 3000mAh பேட்டரி பெற்ற மோட்டோ ஜி 7 பிளஸ் மொபைலில் கேமரா தளத்தில் பிரைமரியாக டுயல் கேமரா செட்டப் கொண்டு 16 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் பெற்று படத்தை ஸ்டபெளைஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.. செல்பி விரும்பிகளுக்கு முகப்பில் 12 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி7 பவர் விவரக்குறிப்புகள்

மற்ற இரு மாடல்களை விட கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக மோட்டோ ஜி7 பவர் மாடலில் 55 மணி நேரம் ஸ்மார்ட்போனை இயக்குகின்ற வகையில் சக்தி வாய்ந்த 5,000mAh பேட்டரி கொண்டதாக ஜி 7 பவர் மொபைலில் டர்போ சார்ஜர் அம்சம் நிரந்தரமாக கிடைக்கின்றது.

முந்தைய இரு ஜி7 வரிசை மாடல்களை விட சிறிய திரையை பெற்ற மோட்டோ ஜி7 பவர் மொபைல் ஃபோனில் 6.2 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரை பெற்று 720×1520 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்ட மேக்ஸ் விஷன் டிஸ்பிளேவினை பெற்றுள்ளது. புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்ற்றி வந்துள்ள இந்த போனில் குவால்காம் வழங்குகின்ற 1.8GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட் 632 SoC  கொண்டு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக 128 ஜிபி வரை மெமரி விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

கேமரா பிரிவில் பிரைமரியாக 12 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.. செல்பி விரும்பிகளுக்கு முகப்பில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி7 பிளே விவரக்குறிப்புகள்

ஜி 7 சீரிஸ் மொபைல்களில் விலை குறைந்த மாடலாக வந்துள்ள மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போனில் 5.7 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரை பெற்று 720×1512 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்ட மேக்ஸ் விஷன் டிஸ்பிளேவினை பெற்றுள்ளது.

பை ஆண்டிராய்டில் இயங்குகின்ற இந்த போனில் 1.8GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட் 632 SoC  கொண்டு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜி.பி. மெமரி பெற்று விளங்குகின்றது. கூடுதலாக 128 ஜிபி வரை மெமரி விரிவுப்படுத்திக் கொள்ள மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

3000mAh பேட்டரியுடன் கேமரா பிரிவில் பிரைமரியாக 13 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ காலிங் மேற்கொள்ள முகப்பில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

நான்கு மோட்டோரோலா மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களும் 4ஜி வோல்டிஇ ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சூர்,  ஸ்லோ மோஷன் ரெக்கார்டிங் உள்ளிட்ட அம்சங்கள் பொதுவாக உள்ளன.

மோட்டோ ஜி 7 சீரிஸ் விலை பட்டியல்

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட உள்ள மோட்டோ ஜி7 வரிசை மொபைலின் விலை விபரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டோ G7 விலை –  ரூ. 21,300

மோட்டோ G7 பிளஸ் விலை –  ரூ. 24,500

மோட்டோ G7 பவர் விலை –  ரூ. 17,800

மோட்டோ G7 பிளே விலை –  ரூ. 14,200

சர்வதேச சந்தையில் கிடைக்கின்ற மாடலின் அடிப்படையில் இந்திய ரூபாய் மதிப்பில் விலை விபரம் தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் பிப்ரவரி இறுதி வாரத்தில் கிடைக்க உள்ளது. மோட்டோ G7 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள தேதி விபரங்ள் அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மாரச் மாத இறுதி வாரங்களில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.