விரைவில் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ இந்தியாவில் அறிமுகம்

மோட்டோரோலா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள டீசரில் அடுத்த சில நாட்களில் ஒன் ஃப்யூஷன்+ பாப்-அப் செல்ஃபீ கேமரா மொபைலை இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடுவதனை உறுதிசெய்துள்ளது.

சமீபத்தில் ஐரோப்பாவில் விற்பனைக்கு EUR 299 (தோராயமாக ரூ.25,400) விலையில் வெளியிடப்பட்ட ஒன் ஃப்யூஷன் பிளஸ் மாடல் இந்திய சந்தையில் ரூ.25,000 விலைக்குகள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதால் இதன் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 730 SoC கொண்டு இயக்கப்பட்டு 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பை பெற்ற மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ மாடலில் 6.5 அங்குல முழு HD+ IPS LCD திரையைப் பெற்று 2340 x 1080 பிக்சல் தீர்மானத்தைக் கொண்டுள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் மேற்கொள்ள 16 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் பாப் அப் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. குவாட் கேமரா செட்டப்பை பெற்று பிரைமரி ஆப்ஷனில் 64 எம்பி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார் உடன் கூடுதலாக 2 எம்பி டெப்த் சென்சார் இனைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு செயல்படுகின்ற ஃப்யூஷன் + மாடலில் HDR10 ஆதரவு மற்றும் 1 டிபி நீட்டிக்கப்பட்ட மைக்ரோ எஸ்டி ஆதரவினை கொண்டு 5,000 mAh பேட்டரியை பெற்று 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வை-ஃபை டூயல் பேண்டு, ப்ளூடூத் 5.0 LE, ஜிபிஎஸ், 4G எல்டிஇ, யூஎஸ்பி மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்வற்றின் ஆதரவினை கொண்டுள்ளது.