ரூ.16,999 விலையில் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ விற்பனைக்கு அறிமுகம்

பாப் அப் செல்ஃபீ கேமரா பெற்ற மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ ஸ்மார்ட்போனில் பிரைமரி ஆப்ஷனில் குவாட் கேமரா செட்டப் பெற்று 64 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

5,000 mAh பேட்டரியை பெற்று 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வந்துள்ள ஃப்யூஷன் பிளஸ் மொபைல் ஃபிளிப்கார்ட் மூலமாக ஜூன் 24 ஆம் தேதி பகல் 12.00 மணி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ 6.5 அங்குல முழு HD+ IPS LCD திரையைப் பெற்று 2340 x 1080 பிக்சல் தீர்மானத்தைக் கொண்டு 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் பெற்றுள்ளது. இந்த மாடலில் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 730 SoC கொண்டு இயக்கப்பட்டு 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் மேற்கொள்ள 16 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் பாப் அப் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. குவாட் கேமரா செட்டப்பை பெற்று பிரைமரி ஆப்ஷனில் 64 எம்பி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார் உடன் கூடுதலாக 2 எம்பி டெப்த் சென்சார் இனைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு செயல்படுகின்ற ஃப்யூஷன் + மாடலில் HDR10 ஆதரவு மற்றும் 1 டிபி நீட்டிக்கப்பட்ட மைக்ரோ எஸ்டி ஸ்லாட் உள்ளது.  இணை விருப்பங்களாக வை-ஃபை டூயல் பேண்டு, ப்ளூடூத் 5.0 LE, ஜிபிஎஸ், 4G எல்டிஇ, யூஎஸ்பி மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்வற்றின் ஆதரவினை கொண்டுள்ளது.