மீண்டும் மோட்டோ ரேசர் போன் விற்பனைக்கு வரக்கூடும் : Motorola Razr

பிரசத்தி பெற்ற மோட்டோரோலா மொபைல் தயாரிப்பாளரின், மிகப்பெரிய வெற்றி பெற்ற மடிக்ககூடிய மோட்டோரோலா ரேசர்  மொபைல் போன் மாடலை மீண்டும் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா ரேசர்

2000 ஆம் ஆண்டில் மோட்டோ ரேசர் மடிக்கூடிய மொபைல் போன் மிகவும் பிரசத்தி பெற்ற மாடலாக சர்வதேச அளவில் வலம் வந்தது. அதனை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான ரேசர் வி3 மாடல் மிகவும் அமோகமான ஆதரவை பெற்று 130 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

கடந்த 2011 மற்றும் 2012-ல் மோட்டோரோலா மற்றும் வெரிசன் இணைந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் டிராய்டு ரேசர் மொபைலை வெளியிட்டிருந்தது.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சிஇஎஸ் 2019 அரங்கில்  வெளியிடப்பட்ட ராயல் ஃபிளக்ஸ்பை மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் 855 சிப்செட் கொண்டு6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் என இருவிதமான மாறுபாடுகளில் வெளியாகியது. இந்த மடிக்கூடிய போன் பெரும்பாலானோரின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த மொபைல் போன் விலை 1600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,12,000) ஆகம். இந்நிலையில், பல்வேறு முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலில் அடுத்த மாதம் அமெலிக்கா மொபைல் சந்தையில் லெனோவா நிறுவனத்தின் கீழ் செயல்படும் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ரேசர மொபைல் போனை மடிக்கூடிய வகையில் வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் மோட்டோ ரேசர் மொபைல் போன் விலை டாலர் 1500 (ரூ.1.07 லட்சம்) ஆக அமைந்திருகலாம் என குறிப்பிட்டுள்ளது.