தமிழகத்தில் 100 மோட்டோ ஹப் ஸ்டோர்கள் - மோட்டோரோலா

மோட்டோரோலா இந்தியா நிறுவனம், நாடு முழுவதும் ஆஃபலைன் ரீடெயிலர்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கில் மோட்டோ ஹப் ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 100 மோட்டோ ஹப்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மோட்டோ ஹப்

லெனோவா நிறுவனத்தின் கீழ் செயல்படும் மோட்டோரோலா நிறுவனம், இந்தியாவில் தனது விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் , பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 100 கடைகள் உட்பட தமிழகத்தில் 100 கடைகளில், சென்னையில் மட்டும் 50 மோட்டோ ஹப்களை திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்டோர்களில் , மோட்டோ நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்கள் உட்பட, மோட்டோ ஷெல், இயர் போன் மற்றும் ஹெட்போன் ஆகியவை விற்பனை செய்யப்பட்ட உள்ளது.

தற்போது இந்நிறுவனம், தமிழகத்தில் அமைந்துள்ள 43 பூர்விகா மொபைல் ஸ்டோர்களில் விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது குறிப்பிடதக்கதாகும்.