MWC 2019 : டச் ஸ்கீரினுக்கு விடை கொடுக்கும் எல்ஜி ஸ்மார்ட்போன்

பட்டன்களுக்கு மாற்றாக டச் ஸ்கீரின் மொபைல் வெளியான நிலையில் இதற்கு மாற்றாக ஜெஸ்ட்யூர் நுட்பத்தை பெற்ற எல்ஜி ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. பிப்ரவரி 24ந் தேதி  மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஜி8 மொபைல் வெளியிடப்படுகின்றது.

எல்ஜி ஜி8 ஸ்மார்ட்போன்

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 அல்லது MWC 2019 விழாவில் எல்ஜி பிரீமியர் அறிமுக நிகழ்ச்சி பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் என எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை டீசர் வீடியோ வாயிலாக தனது அதிகார்வப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் வெளியிட்டிருக்கும் டீசர் வீடியோவில் டச் தொழில்நுட்பத்திற்கு விடைகொடுத்து ஜெஸ்ட்யூர் அல்லது சைகை மூலம் இயங்கும் வகையில் அறிமுகம் செய்ய உள்ள வாசகம் உள்ளது. இதே நிகழ்வில் எல்ஜி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் ஜி8 மாடலை அறிமுகம் செய்யலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றது.
MWC 2019 : டச் ஸ்கீரினுக்கு விடை கொடுக்கும் எல்ஜி ஸ்மார்ட்போன்

எல்ஜி G8 ஸ்மார்ட்போன்

எல்ஜி G8 ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவன ஸ்னாப்டிராகன் 855 பிராசெஸர் சிப்செட் உடன், மூன்று கேமரா சென்சார்கள் பின்புறத்தில் இடத் பெற்றிருக்கலாம். இந்த மொபைல் போன், QHD பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, 3.5mm ஆடியோ ஜாக், குவாட் DAC, கிளாஸ் பேக் மெட்டல் ஃபிரேம் மற்றும் இன்-டிஸ்ப்ளே கேன்டிலீவர்-கன்டக்ஷன் ஸ்பாக்கர் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

மேலும் எல்ஜி ப்ரீமியர் நிகழ்வில் தனது ஐந்தாவது தலைமுறை தொழில்நுட்பத்தை பெற்ற 5ஜி ஸ்மார்ட்போனை மார்ச் மாத அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்ஜி இரண்டு திரைகளை இணைக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஜி மொபைல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் டீசர் வீடியோவை கீழே காணலாம்