10 இன்ச் டிஸ்பிளேவுடன் ஐபாட் மினி 5 & ஆப்பிள் iOS 13 வருகை விபரம்

அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள, குறைந்த விலை 10 இன்ச் ஐபாட் மினி 5 மற்றும்  ஐபாட் மாடல்களை , புதிய ஆப்பிள் iOS 13 இயங்குதளத்தை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

விற்பனையில் உள்ள ஐபாட் 4 வெற்றியை தொடர்ந்து அடுத்து இந்த வருடத்தின் மத்தியில் வெளியிடப்பட உள்ள நிலையில் புதிதாக வரவுள இந்த மாடலில் மிக குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களுடன் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் நோக்கில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

தரமான கேமரா , டச் ஐடி மற்றும் உறுதியான மெலிந்த அலுமினியம் பெசல்லெஸ் ஆகியவற்றுடன் இந்த ஐபேட் அமைந்திருக்கும்.

ஐஓஎஸ் 13 இயங்குதளம்

ஆப்பிள் நிறுவனம், 2020 ஆம் ஆண்டில் வெளியிட உள்ள ஐபோன் ப்ரோ மொபைல்களில், அசத்தலான 3டி லேசர் சென்சார்கள் பெற்ற கேமரா வசதியை உருவாக்க உள்ளது. இதற்காக இந்நிறுவனம் சோனி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளது.

பயன்பாட்டில் உள்ள இயங்குதளத்தின், அடுத்த பதிப்பான ஆப்பிள் iOS 13 இயங்குதளம் , பல்வேறு நவீன அம்சங்களுடன் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக வெளியிடப்பட உள்ளது.