இந்தியாவில் விற்பனை வந்தது புதிய ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர்

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளான ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XS மற்றும் ஐபோன் XR போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஐபோன் XS, மற்றும் ஐபோன் XS மேக்ஸ் போன்கள் இந்தியாவில் ஏற்கனவே கிடைக்கிறது. இந்நிலையில், ஐபோன் XR போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன்களை ஆன்லைனிலும், ஆப்பிள் ஸ்டோர்களிலும் பெற்று கொள்ளாலாம் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய ஐபோன் XR ஸ்மார்ட் போன்கள், முழு ஸ்கிரீன் டிசைன்களுடன் பேஸ் ஐடி மற்றும் A12 பயோனிக் சிப்செட்களுடன் 76,900 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை ஆப்லைனில் குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், இமேஜ் மற்றும் பல அதிகாரப்பூர்வ டீலர்களிடமும், பிளிக்கார்ட், அமேசான், ஏர்டெல் ஸ்டோர், ஜியோ மற்றும் பேடிஎம் மால் போன்றவற்றை பயன்படுத்தியும் வாங்கி கொள்ளலாம்.

இந்தியாவில் விற்பனை வந்தது புதிய ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர்

புதிய ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் 64GB ஸ்டோர்ஜ் கொண்ட போன்கள் 76,900 ரூபாயில் விலையிலும், 128GB வகை போன்கள் 81,900 ரூபாயிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 256GB வகை போன்கள் 91,900 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்போர்ட்ஸ் 6.1 இன்ச் LCD டிஸ்பிளேகளுடன் 1792×828 பிக்சல்களுடன், ட்ரூ டோன் தொழில்நுட்பம் கொண்டிருக்கும். இந்த தொழில்நுட்பம் “லிக்யுட் ரெட்டினா” என்று அழைக்கப்படுகிறது. இந்த டிவைஸ்கள் ஆப்பிள் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட A12 போனிக் சிப்செட்களுடன் கிடைக்கும்.

புதிய ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் அமேசான் இந்தியா இணைய தளத்திலும், பெடிஎம் மால் இணையதளத்திலும் கிடைக்கும். இதுமட்டுமின்றி, இந்த போனை அமேசான் பே, பஜாஜ் பைன்சேர்வ் மற்றும் ஐசிஐசிஐ மற்றும் சிட்டி கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ ஆப்சன்களும், பேடிஎம் மால் வழியாக எக்ஸ்சேஞ்ச் போனசாக 7000 ரூபாய் வரை பெறலாம்.