ரூ.7,499க்கு ரியல்மி சி1 (2019) விற்பனைக்கு வந்தது

ஓப்போ நிறுவனத்தின் ரியல்மி பிராண்டில், புதிதாக ரியல்மி சி1 (2019) மொபைல் ரூ.7,499 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ந் தேதி முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

ரியல்மி சி1

விற்பனைக்கு வந்த நாள் முதல் ரியல்மி சி1 மொபைல் விற்பனை எண்ணிக்கை 1 மில்லியனை கடந்துள்ளது. புதிய ரியல்மி C1 போனில் இரு வேரியன்ட் மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் பிரத்தியேக விற்பனை ஆக பிப்ரவரி 5ந் தேதி பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட் தளத்தில் மட்டும் கிடைக்க உள்ளது.

டிசைன் மற்றும் டிஸ்பிளே

ரியல்மி சி1 (2019) மொபைல் போன் மிகப்பெரிய 6.2 அங்குல ஹெச்டி பிளஸ் திரையுடன் 720×1520 பிக்செல்ஸ் தீர்மானத்தை கொண்டதாக விளங்குகின்றது. டாப் நாட்ச் கொண்டதாக விளங்கும் இந்த மொபைல் போனில் கருப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களில் கிடைக்க உள்ளது.

பிராசெஸர் மற்றும் ரேம்

குவால் காம் நிறுவன 1.8GHz ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் உடன் இயங்குகின்ற 2 ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி ரேம் என இரு வேறு மாறுபாட்டில் Adreno 506 ஜிபியூ கொண்டுள்ளது. உள்ளடக மாறுபாட்டில் 32 ஜிபி மட்டும் பெற்றுள்ளது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டை வாயிலாக 256 ஜிபி வரை விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

கேமரா

கேமரா பிரிவில் பிரைமரி தேர்வாக பின்புறத்தில் இரட்டை கேமரா இடம்பெற்றுள்ளது. 12 மெகாபக்சல்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல்ஸ் என இரு கேமராவுடன் ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. செஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல்ஸ் கேமரா வழங்கப்பபட்டுள்ளது.

பேட்டரி

ரியல்மி சி1 (2019) மொபைல் போனில் மிகவும் சிறப்பு வாய்ந்த 4,230mAh பேட்டரி நாள் முழுமைக்கான பவரை வழங்க உள்ளது.

ரூ.7,499க்கு ரியல்மி சி1 (2019) விற்பனைக்கு வந்தது

மற்றவை

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றிய ஓப்போ கலர்ஓஎஸ் கொண்டு செயல்படுகின்ற இந்த மொபைலில் வை-ஃபை, ப்ளூடுத், 4ஜி வோல்ட்இ உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

ரியல்மி சி1 விலை விபரம்

Realme C1  2GB ரேம்/32GB மெமரி – ரூ.7,499

Realme C1  3GB ரேம்/32GB மெமரி – ரூ.8,499