சாம்சங் கேலக்ஸி ஏ70 - Samsung Galaxy A70

6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் என இரு வெர்ஷனில் வந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஏ70 (Samsung Galaxy A70) ஸ்மார்ட்போனில் 32 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் டிரிப்ள் கேமரா செட்டப்பை பிரைமரி ஆப்ஷனில் வழங்கியுள்ளது.

கருப்பு, கோரல், நீலம் மற்றும் வெள்ளை ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்க உள்ளது. சமீபத்தில் அற்புதமான ரோட்டேட்டிங் கேமரா அம்சத்துடன் கூடிய சாம்சங் கேலக்ஸி A80 ஸ்மார்ட்போன் உட்பட கேலக்ஸி A40, கேலக்ஸி A20e போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஏ70 சிறப்புகள் மற்றும் விலை

25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 4,500 mAh பேட்டரி கொண்ட இந்த போனில் சாம்சங் ஒன் யூஐ அடிப்படை அம்சத்தை கொண்டு ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை கொண்டதாக வந்துள்ளது.

6.7 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரையுடன் 1080×2400 பிக்சல் சூப்பர் AMOLED உடன் கூடிய இன்ஃபினிட்டி யூ அம்சம் வழங்கப்பட்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் பெற்றதாக உள்ள இந்த போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் உடன் உள் சேமிப்பு 128 ஜிபி அம்சத்தை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை வாயிலாக 512 ஜிபி வரை நீட்டிக்க இயலும்.

மூன்று கேமரா ஆப்ஷனை கொண்ட கேலக்ஸி ஏ70 போனில் 32 எம்பி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் பிரிவில் 5 எம்பி சென்சார் கொண்டுள்ளது. செஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 32 எம்பி கேமரா சென்சார் உள்ளது.

இரட்டை சிம் கார்டு ஆதரவு ,வை-ஃபை,25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 4,500 மில்லி ஆம்பியர் ஹவர் பேட்டரி கொண்டதாக விளங்குகின்றது. ஐரோப்பியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற கேலக்ஸி ஏ70 இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் அடுத்த சில வாரங்களில் கிடைக்க உள்ளது.

Samsung Galaxy A70 specifications

 • 6.7 அங்குலம் (2400 x 1080 பிக்சல்) முழு HD+ 20: 9 New Infinity-U Super AMOLED display
 • Octa Core (2.2GHz Dual + 1.8GHz Hexa) ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸர்
 • 6GB Ram, 8GB RAM, 128GB சேமிப்பு வசதி
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் சாம்சங்  One UI
 • இரட்டை சிம்
 • 32MP கேமரா சென்சார், f/1.7, PDAF; Secondary: 8MP சென்சார், f/2.2, 12mm ultra-wide, டெப்த் சென்சார் 5Mp f/2.2; LED flash
 • 32 எம்பி செல்ஃபி சென்சார்
 • இன்-டிஸ்பிளே கைரேகை செனசார்
 • அளவுகள்: 165.2 x 76.5 x 9.3mm
 • Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5, GPS + GLONASS, USB Type-C
 • 4500mAh பேட்டரி உடன் 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்