விரைவில் அறிமுகமாகிறது புதிய சாம்சாங் கேலக்ஸி நோட் 9 சில்வர் வகைகள்

புதிய சாம்சாங் கேலக்ஸி நோட் 9 சில்வர் வகைகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று சாம்சாங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போன்கள் ப்ளூ, பிளாக், பெர்பல் மற்றும் காப்பர் நிறங்களில் ஏற்கனவே வெளியாகியுள்ளது, இந்த ஸ்மார்ட் போன்களின் சில்வர் கலர் வகை ஸ்மார்ட்பொன்கள் அமெரிக்காவில் ஏற்கனவே வெளியாகி விட்டது. இந்த சில்வர் கலர் மொபைல்கள் மற்ற நாடுகளில் வெளியிடப்படும் என்ற தகவலை இந்த நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

இந்த புதிய வெர்சன் சாம்சங் ஸ்மார்ட் போன்கள் LG நிறுவனத்தின் V40 ThinQ மொபைல் போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்துகின்றனர். LG நிறுவனத்தின் V40 ThinQ மொபைல்கள் ஆப்பிள் நிறுவனம், தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்ட அதே வாரத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You