ரெட்மி கோ

இந்தியாவின் முன்னணி சியோமி நிறுவனம், 16 ஜிபி உள்சேமிப்பு கொண்ட ரெட்மி கோ மொபைல் போனை ரூபாய் 4,799 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முன்பாக 8 ஜிபி உள்சேமிப்பு கொண்ட மாடல் ரூ.4,499 விலையில் கிடைத்து வருகின்றது.

1ஜிபி ரேம் , 8 ஜிபி சேமிப்பை பெற்ற ரெட்மி கோ விலை ரூ. 4,499, இந்த மொபைல் ஃபிளிப்கார்ட், mi.com மற்றும் mi ஹோம் மூலம் கிடைக்கின்றது. 16 ஜிபி கொண்ட மாடல் தற்போது அமேசான், mi.com மற்றும் mi ஹோம் வாயிலாக கிடைக்க உள்ளது.

சியோமி ரெட்மி கோ சிறப்புகள்

குறைவான மெமரி கொண்ட மொபைல்களில் மிக வேகமாக இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பெற்றுள்ள கோ மொபைல் போன் 5 அங்குல எல்சிடி டிஸ்பிளே பெற்று கோ மொபைல் போன் மாடலில் 1280 x 720 பிக்சல்ஸ் திர்மானத்துடன், ஆண்டராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ் அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பெற்று விளங்குகின்றது.

ரெட்மி கோ ஸ்மார்ட்போன்

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் உடன் 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி உள்ளடக்க மெமரி, 16 ஜிபி உள்ளடக்க மெமரி பெற்று 128 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டினை விரிவுப்படுத்தவும், ஒரே சமயத்தில் இரு சிம் கார்டுகள் மற்றும் எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.

பிரைமரி சென்சாராக  f/2.0 துளை பெற்ற 8 மெகாபிக்சல்ஸ் பிரைமரி கேமரா மற்றும் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள ரெட்மியின் கோ போனில் கேமரா 5 மெகாபிக்சல்ஸ் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை பெற வழங்கப்பட்டுள்ளது.

3000mAh பேட்டரி கொண்ட இந்த போனில் கூடுதல் ஆதரவுகளாக 4ஜி வோல்ட்இ,  வை-ஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட கூடுதல் ஆதரவுகளை கோ போன் பெற்றுள்ளது.

xiaomi redmi go

Xiaomi Redmi Go specifications

 • 5-inch (1280 x 720pixels) HD 16:9 ஆஸ்பெக்ட் விகிதம்
 • 1.4GHz Quad-Core ஸ்னாப்டிராகன் 425 உடன் Adreno 308 GPU
 • 1GB RAM, 8GB/16GB சேமிப்பு வசதி,
 • 128GB மைக்ரோ எஸ்டி அட்டை
 • ஆண்ட்ராய்டு 8.1 (Oreo Go Edition)
 • இரட்டை சிம்
 • 8MP கேமரா LED Flash, f/2.0 aperture, 1.12μm pixel size
 • 5MP கேமரா f/2.2 aperture, 1.12μm pixel size
 • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
 • அளவுகள்:140.4x 70.1 x 8.35mm; எடை: 137g
 • 4G வோல்ட்இ, ஒய்-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ்
 • 3000mAh பேட்டரி