Home Tech News Mobiles நோக்கியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் – MWC 2018

நோக்கியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் – MWC 2018

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெறுகின்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் (Mobile World Congress 2018) அரங்கில் நோக்கியா 1 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட போன் உட்பட நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 6 (2018) , நோக்கியா 8110 4ஜி  போன்ற ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.

நோக்கியா 1 ஸ்மார்ட்போன்

குறைந்த விலை கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 1 போனில் இலகுவாக இயங்கவல்ல ஆண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள கோ எடிசன் ஆப்கள் இடம்பெற்றிருக்கின்றது.

4.5 அங்குல FWVGA (480×854 பிக்சல்) IPS திரையுடன் கூடிய இந்த போனில் நீலம் மற்றும் சிவப்பு ஆகிய இரு நிறங்களுடன், கூடுதலாக எக்ஸ்பிரஸ் ஆன் கவர் என்ற பெயரில் பிங்க்,மஞ்சள், கிரே மற்றும் ஆசுர் ஆகிய நிறங்களை கொண்ட கவர்கள் $7.99 ( Rs. 520) விலையில் தனியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

8ஜிபி உள்ளீட்டு சேமிப்பு திறனுடன் கூடுதலாக 128ஜிபி வரையில் விரிவுப்படுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி கார் ஆப்ஷனுடன் இந்த போனில் மீடியாடெக் MT6737M SoC கொண்டு 1ஜிபி ரேம் பெற்றதாக வந்துள்ளது.

பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ் பெற்ற 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டதாக வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களுக்கு 2 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு கோ எடிசனில் இலகுவாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நோக்கியா 1 போனில் 2150mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.  4G VoLTE, வை-ஃபை 802.11ac, ப்ளூடூத் v4.2, GPS/ A-GPS, என்எஃப்சி, USB Type-C (2.0), மற்றும்  3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.

வருகின்ற மே மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நோக்கியா 1 மொபைல் போன் விலை ஐரோப்பாவில் $85 ( Rs. 5,500) என நிர்னையம் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தவிர நோக்கியா பிராண்டில் நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 6 (2018) , நோக்கியா 8110 4ஜி  போன்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version