நோக்கியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் - MWC 2018ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெறுகின்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் (Mobile World Congress 2018) அரங்கில் நோக்கியா 1 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட போன் உட்பட நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 6 (2018) , நோக்கியா 8110 4ஜி  போன்ற ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.

நோக்கியா 1 ஸ்மார்ட்போன்

நோக்கியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் - MWC 2018

குறைந்த விலை கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 1 போனில் இலகுவாக இயங்கவல்ல ஆண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள கோ எடிசன் ஆப்கள் இடம்பெற்றிருக்கின்றது.

4.5 அங்குல FWVGA (480×854 பிக்சல்) IPS திரையுடன் கூடிய இந்த போனில் நீலம் மற்றும் சிவப்பு ஆகிய இரு நிறங்களுடன், கூடுதலாக எக்ஸ்பிரஸ் ஆன் கவர் என்ற பெயரில் பிங்க்,மஞ்சள், கிரே மற்றும் ஆசுர் ஆகிய நிறங்களை கொண்ட கவர்கள் $7.99 ( Rs. 520) விலையில் தனியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

நோக்கியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் - MWC 2018

8ஜிபி உள்ளீட்டு சேமிப்பு திறனுடன் கூடுதலாக 128ஜிபி வரையில் விரிவுப்படுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி கார் ஆப்ஷனுடன் இந்த போனில் மீடியாடெக் MT6737M SoC கொண்டு 1ஜிபி ரேம் பெற்றதாக வந்துள்ளது.

பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ் பெற்ற 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டதாக வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களுக்கு 2 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு கோ எடிசனில் இலகுவாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நோக்கியா 1 போனில் 2150mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.  4G VoLTE, வை-ஃபை 802.11ac, ப்ளூடூத் v4.2, GPS/ A-GPS, என்எஃப்சி, USB Type-C (2.0), மற்றும்  3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.

நோக்கியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் - MWC 2018

வருகின்ற மே மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நோக்கியா 1 மொபைல் போன் விலை ஐரோப்பாவில் $85 ( Rs. 5,500) என நிர்னையம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் - MWC 2018

இதைத்தவிர நோக்கியா பிராண்டில் நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 6 (2018) , நோக்கியா 8110 4ஜி  போன்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here