வருகின்ற மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் 2018 அரங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள பட்ஜெட் விலை கொண்ட நோக்கியா 1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பின்னணியாக கொண்டு செயல்படவுள்ளது.

நோக்கியா 1 மொபைல் போன்

சீனாவின் பைடு தளத்தின் வாயிலாக வெளிவந்துள்ள நோக்கியா 1 புகைப்படங்களில் இந்த மொபைலுக்கான இறுதி வடிவத்தை ஹெச்எம்டி குளோபல் தர காத்திருப்பதாக தெரிகின்றது. வெளியாகியுள்ள படத்தில் ஒருமாடலில் பாலிகார்பனேட் பின்புறத்துடன் கேமரா லென்ஸ் முழுமையாக வெளியில் வழங்கப்பட்டுள்ளது, மற்றொன்றில் பாலி கார்பனேட் பாடியுடன் கேமராகளுக்கு மேற்புறம் கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 1 மொபைலில் 5 அங்குல திரையுடன் 720×1280 பிக்சல் தீர்மானத்தை பெற்ற ஐபிஎஸ் டிஸ்பிளே பெற்று 1ஜிபி ரேம் கொண்டதாக 8 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் முன் மற்றும் பின்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட வாய்ப்புள்ளது.

ஓரியோ 8.0 இயங்குதளத்தின் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு கோ பெற்ற முதல் ஸ்மார்ட்போனாக வரவுள்ள மாடலில் கூகுள் மேப் கோ, யூடியூப் கோ உட்பட பல்வேறு இலகு தன்மை கொண்ட செயலிகளை பெற்றிருக்கும்.

இதுதவிர, இந்நிறுவனம் மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் 2018 அரங்கில் நோக்கியா 4, நோக்கியா 7 பிளஸ் ஆகிய மொபைல்கள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.