Home Tech News Mobiles Nokia 1 Plus: நோக்கியா 1 பிளஸ் மொபைல் போன் விபரம் வெளியானது

Nokia 1 Plus: நோக்கியா 1 பிளஸ் மொபைல் போன் விபரம் வெளியானது

ரூ.5000 விலையில் வெளியாக உள்ள நோக்கியா 1 பிளஸ் மொபைல் போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை பெற்ற ஹெம்டி குளோபல் மாடலாக விளங்கும். MWC 2019 அரங்கில் ஒன் பிளஸ் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நோக்கியா 1 பிளஸ்

வருகின்ற பிப்ரவரி மாதம் 25ந் தேதி முதல் 28ந் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 அரங்கில் நோக்கியா நிறுவனம் பிப்ரவரி 24ந் தேதி புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் முக்கிய விபரங்களை வெளியிட உள்ளது. இந்த அரங்கில் நோக்கியா 9 ப்யூர்வியூ, நோக்கியா 8.1 உள்ளயிட்ட மாடல்களுடன் நோக்கியா 1 பிளஸ் பட்ஜெட் விலையில் வெளியிடப்படலாம்.

நோக்கியா 1 பிளஸ் கருவி தொடக்க நிலை சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் 1 ஜிபி ரேம் கொண்ட மாடலாக விளங்க உள்ளது.

நோக்கியா 1 Plus நுட்ப விபரம்

நோக்கியா 1 பிளஸ் மொபைல் போன் 5 இன்ச் திரையுடன் 480×960 பிக்சல்ஸ் தீர்மானத்துடன் மீடியாடெக் MT6739WW சிப்செட் உடன் கூடிய 1 ஜிபி ரேம் பெற்று 4 Cortex-A53 மற்றும் 1.5 GHz கோருடன் பவர்விஆர் GE8100 ஜிபியூ செயல்பாட்டை பெற்றதாக விளங்கும்.

பேட்டரி மற்றும் கேமரா தொடர்பான விபரங்கள் இது வரை கிடைக்கப் பெறவில்லை. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த இயங்குதளம் குறைந்த மெமரியில் விரைவாக இயங்கும் கோ பதிப்பாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. ஆனால், தற்சமயம் வரை கூகுள் நிறுவனம் , ஆண்ட்ராய்டு பை கோ பதிப்பு தொடர்பான விபரத்தை வெளியிடவில்லை.

அனேகமாக நோக்கியா 1 பிளஸ் மொபைல் போன் விலை ரூ.5000 அல்லது அதற்கு குறைவாகவ தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிக விபரங்கள் MWC 2019 அரங்கில் வெளியாகலாம்.

பட உதவி – tiger mobiles

Exit mobile version