வருகின்ற பிப்ரவரி 25ந் தேதி தொடங்க உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 அரங்கில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள உலகின் முதல் ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை பெற்ற நோக்கியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நோக்கியா 1 ஸ்மார்ட்போன்

சமீபத்தில் ஃபெடரல் கமிஷன் சான்றயளிப்பு பட்டியிலில் வெளியான நோக்கியா 1 போன் TA-1071 என்ற குறீயிட்டு பெயரில் சான்றயளிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் தொடக்க நிலை பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள மொபைல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக வெளியாக உள்ளது.

5.36 அங்குல முன்பக்க அமைப்பினை (136mm) பெற்றுள்ள இந்த மாடல் 5 அங்குல காட்சி திரை கொண்டதாக வரவுள்ள இந்த போனில் கூகுள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ஓரியோ 8.1 இயங்குதளத்தை பின்பற்றிய ஆண்ட்ராய்டு கோ எடிசனை பெற்றதாக வரவுள்ளது.

இந்த மொபைல் போன் குவாட் கோர் பிராசெஸருடன் கூடிய 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி நினைவக திறனை கொண்டதாகவும், பின்புறத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றை பெற்றிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4ஜி எல்டிஇ, வை-ஃபை, ப்ளூடூத் ஆகியவற்றுடன் 3000mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட வாய்ப்புள்ள நோக்கியா 1 ஸ்மார்ட்போன் ரூ.5000 விலைக்குள் அமைந்திருக்கின்றது.