ரூ.5499-க்கு நோக்கியா 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிசன்) மொபைல் வெளியானது

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் ரகத்தில் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிசன்) பின்பற்றி, ரூபாய் 5,499 விலையில் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் மார்ச் 28, 2018 முதல் நாடு முழுவதும் ரீடெயிலர்களிடம் கிடைக்க உள்ளது.

நோக்கியா 1 ஸ்மார்ட்போன்

ரூ.5499-க்கு நோக்கியா 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிசன்) மொபைல் வெளியானது

முதன்முறையாக கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் அரங்கில் வெளியிடப்பட்ட மிக இலகுவாக இயங்கும் வகையிலான கோ எடிசன் பெற்ற இந்த ஸ்மார்ட்போன் மிக சிறப்பான செயற்திறனை குறைந்தபட்ச விலையில் வெளிப்படுத்தக்கூடியதாக விளங்குகின்றது.

4.5 அங்குல FWVGA (480×854 பிக்சல்) IPS திரையுடன் கூடிய இந்த போனில் நீலம் மற்றும் சிவப்பு ஆகிய இரு நிறங்களுடன், கூடுதலாக எக்ஸ்பிரஸ் ஆன் கவர் என்ற பெயரில் பிங்க்,மஞ்சள், கிரே மற்றும் ஆசுர் ஆகிய நிறங்களை கொண்ட கவர்கள் ரூ.450 விலையில் தனியாக ஏப்ரல் மாத மத்தியில் விற்பனை செய்யப்பட உள்ளது

8ஜிபி உள்ளீட்டு சேமிப்பு திறனுடன் கூடுதலாக 128ஜிபி வரையில் விரிவுப்படுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி கார் ஆப்ஷனுடன் இந்த போனில் மீடியாடெக் MT6737M SoC கொண்டு 1ஜிபி ரேம் பெற்றதாக வந்துள்ளது.

பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ் பெற்ற 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டதாக வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களுக்கு 2 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு கோ எடிசனில் இலகுவாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நோக்கியா 1 போனில் 2150mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.  4G VoLTE, வை-ஃபை 802.11ac, ப்ளூடூத் v4.2, GPS/ A-GPS, என்எஃப்சி, USB Type-C (2.0), மற்றும்  3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.

ரூ.5499-க்கு நோக்கியா 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிசன்) மொபைல் வெளியானது

நோக்கியா 1 ஆஃபர் & விலை விபரம்

இந்திய சந்தையில் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் ரூ.5499 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஜியோ நிறுவனம் ரூ. 2200 வரையிலான கேஷ்பேக் மற்றும் 60 ஜிபி கூடுதல் டேட்டா நன்மைகள், ஆகியவற்றுடன் 12 மாத விபத்து பாதுகாப்பு வசதி , கோடக் 811 கணக்குடன் ரூ.1000 முதல் தவனையாக செலுத்த வேண்டும். மேலும் ரெட்பஸ் புக் செய்யும் போது 20 % சலுகையை முதல் முறை முன்பதிவு செய்யும்போது வழங்கப்பட உள்ளது.

ரூ.5499-க்கு நோக்கியா 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிசன்) மொபைல் வெளியானது