ஒரு பெண்டா-லென்ஸ் கேமராவை உள்ளடக்கிய நோக்கிய 10 ஸ்மார்ட்போன் மாடலை HMD குளோபல் உற்பத்தி செய்கிறது. தைவானை சார்ந்த ஒப்பந்தத் தயாரிப்பாளர் ஃபாக்ஸ்கான் உடன் இனைந்து நோக்கியா பணியாற்றுவதாக பைடு தளத்தில் ஆதாரம் வெளியாகியிருந்த நிலையில் கூடுதலாக இந்த மொபைலின் வரைபடம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நோக்கியா 10 பென்டா-கேமரா

வருகின்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 அரங்கில் நோக்கியா 10, நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 6 (2018) மற்றும் 4ஜி ஆதரவை பெற்ற நோக்கியா 3310 ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் பென்டா-லென்ஸ் கொண்ட நோக்கியா 10 ஸ்மார்ட்போன் மாடலின் வரை படம் வெளியாகியுள்ளது. இது அதிகபட்சமாக ஏழு கேமராக்கள் மற்றும் இரண்டு எல்இடி ஃபிளாஷ்களை கொண்டுள்ளது. இது நோக்கியா OZO VR கேமராவைப்போல இருக்கும். தொலைபேசியின் பின்புறத்தில் ஐந்து கேமராக்கள் இருக்கும் என்பதனை தவிர வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் இன்னும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது “சரிபார்ப்பு” கட்டத்தில் இருக்கும் சாதனம் ஸ்னாப்ட்ராகன் 845 மொபைல் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

 

நிச்சயமாக, HMD குளோபல் சிறந்த புகைப்படத்தை பதிவு செய்யும் நோக்கில் ஸ்மார்ட்போனில் வேலை செய்யும் ஒரே நிறுவனம் அல்ல. சீன நிறுவனம் Huawei தனது P-20 ஃப்ளைட்ஷிப் தொலைபேசியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது, இதில் மொத்தம் ஐந்து கேமராக்கள் உள்ளன. சாதனம் அதன் மேல் உளிச்சாயில் திரையில் மேலே இரண்டு முனைகளில் ஒரு மூன்று லென்ஸ் கேமரா அமைப்பு வர இருப்பதாக கூறப்படுகிறது. பிப்ரவரி இறுதியில் பார்சிலோனாவில் சர்வதேச மொபைல் காங்கிரசில் முழுமையான விபரங்கள் கிடைக்கப்பெறலாம்.