nokia 110

2ஜி ஆதரவு பெற்ற ஃபீச்சர் ரக மொபைல்களின் விற்பனை தொடர்ந்து சீராக உள்ள நிலையில் நோக்கியா 110 ஃபீச்சர் போனை ரூ.1599 விலையில் விற்பனைக்கு ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் முந்தைய நோக்கியா 105 மாடலை விட கூடுதலான வசதிகளை பெற்றதாகும்.

2 ஜி ஆதரவு மட்டும் பெற்ற சாதனம் முதன்முதலில் நோக்கியா 110 ஆனது நோக்கியா 2720 ஃபிளிப், நோக்கியா 7.2, நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 800 டஃப் ஆகியவற்றுடன் IFA 2019 போது அறிமுகப்படுத்தப்பட்டது. நோக்கியா 110 ஓஷன் ப்ளூ, பிளாக் மற்றும் பிங்க் ஆகியவற்றில் அக்டோபர் 18 முதல் இந்தியாவின் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றது. இந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மூலம் 1,599 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றது.

நோக்கியா 110 விவரக்குறிப்புகள்

நோக்கியா 110 மொபைல் போன் ஆனது முன்பாக கிடைக்கின்ற நோக்கியா 105 மாடலின் மேம்பட்ட தொலைபேசி ஆகும். இந்த போன் 1.77 அங்குல QVGA கலர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. உங்கள் பாக்கெட்டில் பொழுதுபோக்கு என இந்நிறுவனத்தால் குறிப்பிடப்படுகின்ற இந்த மொபைலில்  விஜிஏ கேமரா, மியூசிக் பிளேயருடன், ஸ்னேக், டூடுல் ஜம்ப், நிஞ்ஜா ஜம்ப், ஏர் ஸ்ட்ரைக் மற்றும் பெனால்டி கப் போன்ற விளையாட்டுகளை கொண்டுள்ளது.

இரு சிம் கார்டு ஆதரவுகளை பெற்ற இந்த மொபைலில் எஃப்எம் ரேடியோவையும் கொண்டுள்ளது. 32 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டுடன் 18.5 நாட்கள் காத்திருப்பு நேரம் பெற்ற 800 எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது.