Nokia 125, Nokia 150

நோக்கியாவின் பிரசத்தி பெற்ற ஃபீச்சர் போன்களில் தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ப நோக்கியா 125 மற்றும் நோக்கியா 150 என இரு மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதுதவிர, இந்நிறுவனம் நோக்கியா சி3 மற்றும் நோக்கியா 5.3 மாடலையும் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

நோக்கியா 125 சிறப்புகள்

தொடக்க நிலை நோக்கியா 125 ஃபீச்சர் போனில் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே பெற்று வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ ஆதரவு உள்ளது. மேலும் 2000 தொடர்புகள் மற்றும் 500 எஸ்எம்எஸ் செய்திகளை சேமிக்க போதுமான சேமிப்பு உள்ளது. தொலைபேசியில் கேமரா இல்லை என்றாலும், பின்புறத்தில் ஒரு ஃபிளாஷ் லைட் உள்ளது. மிக சிறப்பான பேட்டரியை பெற்றிருக்கின்ற 125-ல் 1020mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இரட்டை சிம் கார்டு, டூயல் பேண்டு 900/1800MHz வழங்கப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கின்ற நோக்கியா 125 விலை ரூ.1,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 150 சிறப்புகள்

நோக்கியா 125 மொபைலை போலவே அமைந்திருந்தாலும் கூடுதலாக VGA கேமரா வழங்கப்பட்டு, 32 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டினை இணைக்கலாம். ப்ளூடுத் 3.0, இரட்டை சிம் கார்டு, டூயல் பேண்டு 900/1800MHz போன்றவற்றுடன் 1020mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனிலும் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே பெற்று வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ ஆதரவு உள்ளது. மேலும் 2000 தொடர்புகள் மற்றும் 500 எஸ்எம்எஸ் செய்திகளை சேமிக்க போதுமான சேமிப்பு உள்ளது.

நோக்கியா 150 விலை ரூ.2,299 ஆக நிர்ணையிக்கப்பட்டு சிவப்பு, சியான் மற்றும் கருப்பு என மூன்று நிறத்தில் கிடைக்கும்.