நோக்கியா 2.2

ரூ.6,999 அறிமுக விலையில் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஓன் இயங்குதளத்தை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி ரேம் என இரு விதமான வகைகளில் வந்துள்ளது.

3000mAh பேட்டரி பெற்றதாக வந்துள்ள நோக்கியா 2.2 மொபைல் முன்பாக நோக்கியா 2.1 போன் 4000mAh பேட்டரியுடன் வந்துள்ளது. ஜூன் 30 தேதிக்கு பிறகு நோக்கியாவின் 2.2 விலை உயர்த்தப்பட உள்ளது.

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன்

டூயல் 4ஜி வோல்ட்இ ஆதரவை பெற்றதாக வந்துள்ள நோக்கியா 2.2 போனில் 3000mAh பேட்டரி பெற்றதாக வந்துள்ள நிலையில், ஜூன் 11 முதல் ஃபிளிப்கார்ட் மற்றும் நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து ரூ.2,200 வரை கேஷ்பேக் ஆஃபர் மற்றும் 100 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்க உள்ளது.

5.71 அங்குல HD+ முழு நாட்ச் டிஸ்பிளேவுடன், 19:9 ஆஸ்பெக்ட் விகிதம் பெற்றதாக உள்ள இந்த போனில் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ A22 பிராசெஸர் சிப்செட் உடன் 2GB/3GB ரேம் மற்றும் 16GB/32GB என இரு வகை உள் சேமிப்பு வகைகளில் கிடைக்க உள்ளது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு அட்டை ஆதரவுடன் 400GB வழங்க உள்ளது.

பிரைமரி சென்சார் பிரிவில் 13 மெகாபிக்சல் சென்சார் உடன் சிங்கிள் கேமரா கொண்டதாக f/2.2 மற்றும் HDR அம்சம் உள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளுக்கு 5 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 5W சார்ஜருடன் கூடிய 3,000mAh பேட்டரி கொண்டதாக வந்துள்ளது.

Nokia 2.2

Nokia 2.2 specifications

 • 5.71-inch (720 x 1520 pixels) HD+ TFT LCD 19:9 aspect ratio 2.5D curved glass display
 • 2GHz Quad-Core MediaTek Helio A22 12nm processor with IMG PowerVR GE-class GPU
 • 2GB RAM with 16GB storage /  3GB RAM with 32GB storage, expandable memory up to 400GB with microSD
 • Dual SIM
 • Android 9.0 (Pie)
 • 13MP rear camera with LED flash, f/2.2 aperture, 1.12um pixel size
 • 5MP front-facing camera with f/2.2 aperture, 1.12um pixel size
 • 3.5 mm headphone jack, FM Radio
 • Dimensions: 145.96 x 70.56 x 9.3 mm; Weight: 153g
 • Dual 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS + GLONASS
 • 3000mAh battery