nokia 2.3

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டீசரில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அடுத்த சில வாரங்களுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகுவது உறுதியாகியுள்ளது. கடந்த வாரம் புதிய நோக்கியா 2.3 மாடல் எகிப்து நாட்டில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

நோக்கியா இந்தியா டவீட்டர் பக்கம் வெளியிட்டுள்ள டீசரில் ஏறக்குறைய சமீபத்தில் எகிப்தில் வெளியிடப்பட்ட மாடலை போன்றே அமைந்துள்ளது. மேலும் இந்த மாடலின் விலை யூரோ 150 (ரூ. 8,600)  குறிப்பிடதக்கதாகும்.

இந்த சாதனம் 6.2 அங்குல எச்டி + (720×1520 பிக்சல்கள்) பெற்று 19: 9 விகிதத்துடன் கூடிய  டியர் டிராப் திரையை கொண்டதாக அமைந்துள்ளது. டூயல் சிம் கொண்டு இயக்கப்படுகின்ற நோக்கியா 2.3 மீடியாடெக் ஹீலியோ A22 SoC hcpfod 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு பெற்றதாக உள்ளது. மேலும் கூடுதலாக மெமரியை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

நோக்கியா 2.3 மாடலில் பின்புறத்தில் டூயல் கேமராக்கள் வழங்கப்பட்டு 13 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. மற்ற முக்கிய விவரக்குறிப்புகள் 4,000 எம்ஏஎச் பேட்டரி, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் பிரத்யேக கூகிள் அசிஸ்டனஸ் பொத்தான் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.