nokia 2.3

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய நோக்கியா 2.3 மொபைல் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.8,199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒற்றை வேரியண்டில் மட்டும் வந்துள்ள 2.3 மாடலில் 13 எம்பி கேமரா மற்றும் 2 எம்பி என டூயல் கேமராவை கொண்டுள்ளது.

இந்த சாதனம் 6.1 அங்குல எச்டி + (720×1520 பிக்சல்கள்) பெற்று 19: 9 விகிதத்துடன் கூடிய  டியர் டிராப் திரையை கொண்டதாக அமைந்துள்ளது. டூயல் சிம் கொண்டு இயக்கப்படுகின்ற நோக்கியா 2.3 மீடியாடெக் ஹீலியோ A22 SoC 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு பெற்றதாக உள்ளது. மேலும் கூடுதலாக 400 ஜிபி மெமரியை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

நோக்கியா 2.3 மாடலில் பின்புறத்தில் டூயல் கேமராக்கள் வழங்கப்பட்டு 13 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. மற்ற முக்கிய விவரக்குறிப்புகள் 4,000 எம்ஏஎச் பேட்டரி, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் பிரத்யேக கூகிள் அசிஸ்டனஸ் பொத்தான் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

nokia 2.3