டூயல் கேமரா பெற்ற நோக்கியா 2.4 மொபைல் அறிமுகமனாது

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடலில் டூயல் கேமரா, 4500mAh பேட்டரியுடன் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மாடல் இந்தியாவில் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் கிடைக்க துவங்கலாம்.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்

நோக்கியாவின் 2.3 வெற்றியை தொடர்ந்து வெளிவந்துள்ள நோக்கியா 2.4 போனில் 6.5 அங்குல எச்டி+ திரையைக் கொண்டு 3 ஜிபி ரேம் அல்லது 2 ஜிபி ரேம் உடன் மீடியாடெக் ஹீலியோ பி22 மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதள ஆதரவில் இயங்குகிறது. கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, இரண்டாவதாக 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், இரவு முறைக்கும் மற்றும் போர்ட்ரெயிட் ஆதரவினை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், இரட்டை 4G VoLTE, வை-ஃபை 802.11 b / g / n, புளூடூத் 5.0, GPS + GLONASS, மைக்ரோ யூ.எஸ்.பி போன்றவற்றுடன் 4500mAh பேட்டரியை பெற்றுள்ளது.

ஐரோப்பாவில் நோக்கியா 2.4 விலை தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.10,240 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா 3.4 உட்பட நோக்கியா பவர் இயர் பட்ஸ் மற்றும் போர்டெபிள் வயர்லெஸ் ஸ்பீக்கரையும் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க – நோக்கியா 3.4 மொபைல் அறிமுகம்