நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அக்டோபர் 5ந் தேதி அறிமுகம்வரும் அக்டோபர் 5ந் தேதி நோக்கியா மொபைல் போன் நிறுவனத்தின் புதிய நோக்கியா 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் நோக்கியா 2 படங்களை evan blass வெளியிட்டுள்ளார்.

நோக்கியா 2 விபரம்

இந்தியாவில் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஆகிய மூன்று மொபைல் போன்களும் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனில் 1.27GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 பிராசஸர் பயன்படுத்தப்பட்டு  1ஜிபி ரேம் கொண்டிருக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கியா 3 மொபைலை போலவே டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் 5 அங்குல திரை கொண்டதாக இருக்கலாம். கேமரா துறையில் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் முன்புறத்தில் பெற்றிருக்கலாம்.

நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அக்டோபர் 5ந் தேதி அறிமுகம்

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தில் செயல்பட உள்ள இந்த மொபைலில் 4ஜி எல்டிஇ ஆதரவினை பெற்றதாக வை-ஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகளுடன் மிகவும் திறன் வாய்ந்த 4000mAh பேட்டரி பெற்றுள்ளது.

நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அக்டோபர் 5ந் தேதி அறிமுகம் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அக்டோபர் 5ந் தேதி அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here