பட்ஜெட் விலையில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டில் புதிய நோக்கியா 2 ஆண்ட்ராய்டு ஸ்மாரட்போன் மாடலை பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா 2 ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலையில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்திய சந்தைக்கான விலை விபரம் வெளியிடப்பவில்லை,இருந்தபோதும் ஐரோப்பா சந்தை விலை யூரோ மதிப்பில் 99 (ரூ.7457) ஆகும். நவம்பர் மத்தியில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதால், இதே காலத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

பாலிகார்பனேட் மற்றும் 6000 சீரிஸ் அலுமினிய சட்டம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவியில் காப்பர் பிளாக், ப்ரீயட் பிளாக் மற்றும் ப்ரியட் வெள்ளை ஆகிய மூன்று நிறங்களை கொண்டுள்ளது.

5 அங்குல ஹெச்டி (720x1280px) LTPS திரையை பெற்றுள்ள நோக்கியா 2 மொபைல் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்துடன் வந்துள்ளது.

பிராசெஸர் & ரேம்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டு இயக்கப்படுகின்ற நோக்கியா 2 போனில் 1.2GHz பிராசெஸருடன் கூடிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 SoC சிப்செட் உடன் 1ஜிபி ரேம் உடன் 8ஜிபி உள்ளடக்க சேமிப்பை பெற்றிருப்பதுடன் மைக்ரோ எஸ்டி அட்டை  கொண்டு 128GB வரை சேமிப்பை அதிகரிக்கலாம்.

பட்ஜெட் விலையில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

கேமராதுறை

கேமரா துறையில் தொடக்கநிலை சந்தைக்கு ஏற்ற அம்சங்களை பெற்ற இந்த போனில் ஆட்டோஃபோகஸ் உடன் எல்இடி ஃபிளாஷ் பெற்ற 8 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருப்பதுடன், முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

இரண்டு நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் திறன் பெற்ற 4100mAh பேட்டரியை மூலம் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் இயக்கப்படுகின்றது.

மற்றவை

இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் விருப்பங்களாக 4G வோல்ட்இ, Wi-Fi 802.11 b/g/n,ப்ளூடூத் v4.1, GPS/ A-GPS, பண்பலை ரேடியோ, மைக்ரோ-யூஎஸ்பி, மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.

பட்ஜெட் விலையில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

விலை

ஐரோப்பா சந்தையில் €99 என்ற விலையில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 2 ஸ்மார்ட்போன் இந்திய விலை ரூ.7000 என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த மாத மத்தியில் விற்பனைக்கு கிடைக்கப் பெறலாம்.

பட்ஜெட் விலையில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here