நோக்கியா 3.1, நோக்கியா 5.1, நோக்கியா 6.1 நோக்கியா 8 சிரோக்கோ விலை குறைப்பு

எச்எம்டி குளோபல் நிறுவனம், குறிப்பிட்ட சில மாடல் நோக்கியா போன்களின் விலையில் இந்தியாவில் குறைந்துள்ளது. என்ட்ரி லெவல் மாடல்களுக்கான இந்த் குறைப்பு 1,000 ரூபாய் மற்றும் 1,500 ரூபாயாக உள்ளது. விலை குறைக்கப்பட்ட மாடல்கள் குறித்த விபரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 3.1 ஸ்மார்ட் போன்கள் 3GB ரேம் 32GB ஸ்டோராஜ் கொண்ட போன்கள் 9 ஆயிரத்து 728 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பழைய விலையில் இருந்து ஆயிரம் ரூபாய் குறைவாகும். கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன்களின் அப்போதைய விலையாக 11,829 ரூபாயாக இருந்தது.

நோக்கியா 3.1, நோக்கியா 5.1, நோக்கியா 6.1 நோக்கியா 8 சிரோக்கோ விலை குறைப்பு
அடுத்ததாக நோக்கியா 5.1 3GB ரேம் 32GB ஸ்டோராஜ் கொண்ட போன்கள் 12 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் விற்பனையானது. இதில் தற்போது 1,500 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6.1 வகைகளில் 3GB ரேம் 32GB ஸ்டோராஜ் மற்றும் 4GB ரேம் 64GB ஸ்டோராஜ் என்ற இரண்டு வகை போன்களிலும் முறையே 1,500 மற்றும் 1,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக 34ஆயிரத்து 709 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 8 சிரோக்கோ போன்கள் விலையில் இருந்து 13,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்ட போது 49, 999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.